கல்லூரியின் முன்னாள் ஆசிரியை காலஞ்சென்ற கமலாவதி அவர்களின் அன்புக் கணவரும், கல்லூரியின் பழைய மாணவனும், முன்னாள் ஆசிரியரும், பழைய மாணவர் சங்கத்தின் முன்னாள் பொருளாளருமாகிய சிவகுமாரன், கல்லூரியின் பழைய மாணவியான மானிப்பாய் சர்வதேசக் கல்லூரியின் பிரதி அதிபர் அம்பிகா, கல்லூரியின் பழைய மாணவனான புற்றுநோய் மருத்துவ நிபுணர் ஜெயகுமாரன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆகிய கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும், முன்னாள் அதிபருமாகிய திரு.K.K.நடராஜா அவர்கள் இன்று 17-12-2020 வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் சிவபதம் அடைந்துள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
காரை.இந்து பழைய மாணவர் சங்கம், கனடா.
No Responses to “ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்!”