ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டு உலக நாடுகளில், வேறுபட்ட திகதிகளில் கொண்டாடப்பட்டு வருகின்ற சர்வதேச சிறுவர் தினமானது ஸ்ரீலங்காவில் ஆண்டுதோறும் ஒக்டோபர் 01ஆம் திகதி கொண்டாடப்பட்டு வருகிறது. சிறுவர்களின் உரிமைகள் தொடர்பில் பொது விழிப்புணர்வினை மேம்படுத்தும் நோக்கில் அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் இச்சிறுவர் தின கொண்டாட்டத்தினை ஏற்பாடு செய்து சிறப்பாகக் கொண்டாடி வருகின்றன.
கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ள நெருக்கடிநிலை காரணமாக ஸ்ரீலங்காவில் எளிமையான முறையில் கொண்டாடப்பட்டு வந்த நிலையில் காரைநகர் இந்துக் கல்லூரியிலும் இச்சிறுவர் தினமானது சென்ற ஒக்டோபர் 02ஆம் திகதி கொண்டாடப்பட்டது. கல்லூரியின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்களின் தலைமையில் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற இக்கொண்டாட்டத்தில் ஊர்காவற்றுறை நீதிமன்ற நன்னடைத்தை அதிகாரி திரு.சிவஞானம் வேந்தன் அவர்கள் சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொண்டு மாணவர்களின் தiலைமைத்துவ வருகை, மாணவர்கள் மூத்தோர்களை கனம் பண்ணுதல் என்பன குறித்து விளக்க உரையாற்றியிருந்தார். கல்லூரியின் சில ஆசிரியர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியிருந்ததுடன் மாணவர்களிற்கு ஆசிரியர் நலன்புரிச் சங்கத்தின் அனுசரணையில் பரிசில் பொருட்களும் வழங்கப்பட்டிருந்தன.
இந்நிகழ்வின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை கீழே பார்வையிடலாம்:
No Responses to “காரை.இந்துவில் நடைபெற்ற சர்வதேச சிறுவர் தின கொண்டாட்டம்.”