காரைநகர் இந்துக் கல்லூரியின் வடக்கு வளாகத்துடன் இணைந்த கல்லூரிக்குச் சொந்தமான காணிகள் எல்லை வேலிகள் அற்றுக் காணப்பட்டன. பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை, பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளை, பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கம் ஆகிய அமைப்புக்களின் நிதி உதவியுடன் இக்காணிகள் பாடசாலையினால் கொள்முதல் செய்யப்பட்டிருந்தன. பழைய மாணவர் சங்கத்தின் முயற்சியினால் தற்போது இக்காணிகளைச் சூழவுள்ள எல்லை வேலிகளற்ற பின்னே உள்ள பகுதி கொங்கிறீற்றுத் தூண்கள் நிறுத்தப்பட்டு முட்கம்பியினாலான வேலி அமைக்கப்பட்டுள்ளது. இவ்வேலியினை அமைப்பதற்கு ஏற்பட்ட செலவான ஒரு இலட்சத்து எண்பத்து நாலாயிரத்து நானூற்று ஐம்பது(ரூ184450.00) ரூபாவினை பிரபல தொழிலதிபர் திரு.சிதம்பரப்பிள்ளை நேசேந்திரன் அவர்கள் உதவியிருந்தார். கல்லூரியின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறைகொண்டு பழைய மாணவர் சங்கத்திற்கு உறுதுணையாகவிருந்து செயலாற்றி வரும் திரு நேசேந்திரன் அவர்கள் கடந்த காலங்களிலும் நிதிப்பங்களிப்பு உள்ளிட்ட பலவிதமான உதவிகளையும் வழங்கி வருபவராவார். இவர் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
எல்லை வேலி அமைப்பதற்குரிய நிதியினை வழங்கி உதவிய திரு,நேசேந்திரன் அவர்களின் கல்லூரி மீதான விசுவாச உணர்வினைப் பாராட்டிய கல்லூரியின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்கள் பழைய மாணவர் சங்கத்தின் சார்பிலும் கல்லூரிச் சமூகத்தின் சார்பிலும் உளமார்ந்த நன்றியையும் திரு.நேசேந்திரன் அவர்களுக்கு இவ்விணையத்தளம் ஊடாகத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார்.திரு.சிதம்பரப்பிள்ளை நேசேந்திரன்
எல்லைவேலி அமைக்கப்பட்டுள்ள இடத்தைக்காட்டும் வரைபடமும் அமைக்கப்பட்டுள்ள எல்லைவேலியின் படங்களும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.பச்சை நிறக் கோட்டினால் அடையாளமிட்டுக் காட்டப்பட்ட பகுதி புதிதாக அமைக்கப்பட்ட எல்லை வேலியை குறிக்கிறது.
நீல நிறக் கோடுகளினால் அடையாளமிடப்பட்டுள்ள பகுதி பாடசாலைக்குரிய 11 பரப்புக் காணியைக் குறிக்கிறது. இதில் 2பரப்புக் காணி பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையின் உதவியுடனும், 3பரப்புக் காணி பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளையின் உதவியுடனும், 6பரப்புக் காணி பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கத்தின் உதவியுடனும் கொள்முதல் செய்யப்பட்டவையாகும்.
சிவப்பு நிறக் கோடுகளினால் அடையாளமிடப்பட்டுள்ள பகுதி பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கத்தின் உதவியுடன் கொள்முதல் செய்யப்பட்ட 10 பரப்புக் காணியைக் குறிக்கிறது.
No Responses to “கல்லூரிக் காணிகளிற்கான எல்லை வேலி தொழிலதிபர் நேசேந்திரன் அவர்களின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுள்ளது.”