2021ஆம் ஆண்டுக்கான உறுப்புரிமைப் பணமும், செலுத்தத் தவறிய 2020ஆம் ஆண்டுக்கான உறுப்புரிமைப் பணமும் தற்போது பெற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றது. இது விடயத்தில் அனைத்து உறுப்பினர்களின் மேலான ஒத்துழைப்பினை சங்க நிர்வாகம் பணிவாக வேண்டி நிற்பதுடன் என்றும் போல அனைவரதும் ஊக்குவிப்பும் ஆதரவும் கிடைக்கும் என உறுதியாக நம்புகின்றது.
சாதாரண உறுப்புரிமைப் பணம் ஆண்டொன்றிற்கு 10.00 டொலராகவே உள்ளது.
ஆயுட்கால உறுப்புரிமைமைப் பணத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றம்:
புதிதாக இணைந்துகொள்ளும் உறுப்பினருக்கான ஆயுட்கால உறுப்புரிமைப் பணம் 100.00டொலர்கள் என்பதில் மாற்றமில்லை. ஆயினும் ஏற்கனவே உறுப்புரிமையைப் பெற்றுக்கொண்டவர்கள், தொடக்கம் முதல் இதுவரைக்கும் செலுத்திய உறுப்பிரிமைப் பணத்தை 100.00 டொலர்களிலிருந்து கழித்து வரும் தொகையை செலுத்துவதன் மூலம் ஆயுட் கால உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்ளமுடியும்.
இதுவரை செலுத்தப்பட்ட உறுப்புரிமைப் பணத்தின் மொத்தத் தொகை குறித்த விபரத்தினை எம்முடன் தொடர்புகொண்டு அறிந்துகொள்ளமுடியும்.
பின்வரும் வழிகளில் உறுப்புரிமைப் பணத்தினைச் செலுத்திக்கொள்ளமுடியும்.
சங்கத்தின் வங்கிக் கணக்கில் வைப்பிலிட்ட பின்னர் தரப்பட்டுள்ள தொலைபேசி எண்களுள் ஒன்றினை அழைத்தோ அன்றி மின்னஞ்சல் வழியாகவோ அறியத்தரலாம்.
karaihinducanada@gmail.com என்ற மின்னஞ்சல் ஊடாகவும்(E-Transfer) அனுப்பிவைக்கலாம்.
கடன் அட்டை, வங்கி அட்டை ஆகியவற்றைப் பயன்படுத்தி Pay Pal ஊடாகவும் செலுத்திக்கொள்ளமுடியும். இதற்கான இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.
தங்களுக்கு அண்மையிலுள்ள சங்கத்தின் நிர்வாக சபை உறுப்பினரிடமும் மொன்றியல், ஒட்டாவா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய பிரதேசங்களிலுள்ள உறுப்பினர்கள் அப்பகுதிக்குரிய இணைப்பாளரிடமும் கையளிக்கலாம்.
கீழே தரப்பட்டுள்ள தொலைபேசி ஒன்றின் ஊடாகத் தொடர்பு கொண்டால் உறுப்புரிமைப் பணத்தினை இலகுவாகப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து தரமுடியும்.
வங்கிக் கணக்கு விபரம்:
TD Bank Account Number: 5238995
Transit Number: 00329
தொடர்புகளுக்கு:
(416)804 0587 அல்லது (647)639 2930
மின்னஞ்சல் முகவரி: karaihinducanada@gmail.com
சாதாரண உறுப்புரிமை, ஆயுட்கால உறுப்புரிமை, தொடர்புமிக்க உறுப்புரிமை(Associate Membership) ஆகியவற்றில் ஒன்றினைப் புதிதாகப் பெற்றுக்கொண்டு பாடசாலையின் வளர்ச்சியில் பங்குகொள்ள விரும்புவோர் கீழே தரப்பட்டுள்ள இணைப்பினை அழுத்தி விபரங்களைப் பெற்றுக்கொண்டு விண்ணப்பிக்கமுடியும்.
http://www.karaihinducanada.com/?page_id=1756
No Responses to “உறுப்புரிமைப் பணத்தினைச் செலுத்தி உதவுமாறு பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை அனைத்து உறுப்பினர்ளையும் அன்பாக வேண்டிக்கொள்கின்றது”