காரைநகர் இந்துக் கல்லூரியில் தைப்பொங்கல் விழா கல்லூரியின் மாணவர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தகின்ற அமைப்பாகிய இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
பொங்கல் விழாவைத் தொடர்ந்து காரை.இந்துவின் ஊட்டப் பாடசாலைகளிலிருந்து 6ஆம் தரத்தில் அனுமதியைப் பெற்றுக்கொண்ட 63 மாணவர்களை வரவேற்கின்ற சம்பிராதய நிகழ்வான கால்கோள் விழா நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது. ஏழாம் தர மாணவர்கள் புதிய மாணவர்கள் அனைவருக்கும் பூக்கள் வழங்கி வரவேற்றனர். சென்ற ஆண்டைக் காட்டிலும இவ்வாண்டு அதிக மாணவர்கள் அனுமதியைப் பெற்றுள்ளதுடன் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பல மாணவர்களும் உள்ளடங்கியிருப்பது முன்னேற்றகரமான விடயம் என அதிபர் திரு.ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.
தைப்பொங்கல் விழாவில் எடுக்கப் பெற்ற புகைப் படங்களும், கால்கோள் விழாவின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் கீழே இணைக்கப்பட்டுள்ளன:
No Responses to “காரை.இந்துவில் நடைபெற்ற தைப்பொங்கல் விழாவும், 6ஆம் தர மாணவர்களிற்கான கால்கோள் விழாவும்.”