ரொறன்ரோ பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கையினை ஏற்படுத்தும் வரலாற்றுப் பணிக்கு உதவும் பொருட்டு காரை.இந்து பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிதி சேகரிப்புத் திட்டத்திற்கு, தமிழ் வாழவேண்டும், தமிழர் தம் அடையாளத்தை தக்கவைத்துக் கொள்ளவேண்டும, தமிழின் தொன்மையும் பெருமையும் உலகறியவேண்டும் என்கின்ற உணர்வோடு எமது சங்கத்தின் உறுப்பினர்களும், அனுசரணையாளர்களும் இதுவரைக்கும் வழங்கிய உதவிகளினால் நாம் எதிர்பார்த்ததற்கு மேலான தொகையினை எட்டமுடிந்துள்ளமையை மிகுந்த மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கின்றோம்.
எதிர்வரும் ஜனவரி 30ஆம் திகதியுடன் நிதிசேகரிப்புத் திட்டத்தினை நிறைவுக்குகொண்டு வந்து அது வரைக்கும் சேகரிக்கப்பட்ட தொகையினை தமிழ் இருக்கைச் செயற்பாட்டுக் குழுவிடம் கையளிக்க திட்டமிட்டுள்ளோம். எனவே எம் தாய்த் தமிழ் அன்னையை அரியாசனத்தில் அமரவைத்து அழகு பார்க்கவுள்ள அரும் பணிக்கு உதவுவதற்கு எண்ணியுள்ள அன்புத் தமிழ் நெஞ்சங்களே! உங்களது உதவியை 30ஆம் திகதிக்கு முன்னதாக அனுப்பி வைக்குமாறு தயவாக வேண்டிக் கொள்கின்றோம். அதற்கு முன்னதாக அனுப்பிவைப்பதற்கு சாத்தியப்படாதவிடத்து நீங்கள் வழங்க விரும்பும் உதவித் தொகையினை மட்டும் அறியத் தந்தால் அத்தொகையானது நாம் வழங்கவிருக்கும் உதவித் தொகையுடன் சேர்த்துக்கொள்ளப்படும் என்பதுடன் இதனை தங்களிடமிருந்து பின்னர் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
கனேடிய வருமானவரித்துறையின் வரிவிலக்கினைப் பெற்ற உங்களது நன்கொடைக்கான பற்றுச் சீட்டு, ரொறன்ரோ பல்கலைக்கழகத்தினால் உங்கள் ஒவ்வொருவருக்கும் நேரடியாக அனுப்பிவைக்கப்படும்.
மேலதிக தொடர்புகளிற்கு: 416 804 0587 அல்லது 416 710 6180
காரை.இந்து பழைய மாணவர் சங்கம், கனடா.
ஓய்வு பெற்ற காவற்துறை அதிகாரியும், தமிழுலகின் தலைசிறந்த ஊக்கமளிக்கும் பேச்சாளருமாகிய(Motivation Speaker) திரு.கலியமூர்த்தி அவர்கள் தமிழ் இருக்கைக்கு ஆதரவாக “ஒரு மொழி அழிந்தால் ஒரு இனம் அழிந்து விடும்” என்கின்ற தொனிப்பொருளில் ஆற்றிய உரையின் காணொளி பார்த்துப் பயன்பெறும்பொருட்டு கீழே இணைக்கப்பட்டுள்ளது:
No Responses to “ரொறன்ரோ பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு வழங்கவுள்ள வரலாற்று உதவியில் உங்களது பங்களிப்பையும் சேர்த்துக் கொள்வதற்கான இறுதி நாள் ஜனவரி 30.”