ஆண்டுதோறும் யூலை மாதம் 04ஆம் திகதி நடைபெற்று வருகின்ற நிறுவுநர் தினமும், பரிசளிப்பு விழாவும் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட நெருக்கடிநிலையினால் சென்ற ஆண்டு நடாத்தப்படமுடியாத நிலையில், பரிசளிப்பு விழாவினை மட்டும் சென்றகிழமை நடாத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. நெருக்கடிநிலை மோசமடைந்து வருவதைத் தொடர்ந்து திட்டமிட்டவாறு இவ்விழாவினை குறிப்பிட்ட திகதியில் நடாத்தமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இருந்தபோதிலும் அதிபரும், ஆசிரியர்களும் எடுத்துக்கொண்ட முயற்சியின் பயனாக எளிமையானமுறையில் இரண்டு அமர்வுகளாக இப்பரிசளிப்பு விழாவினை நடாத்துவதெனத் தீர்மானித்ததன் அடிப்படையில், இவ்விழாவின் முதலாவது அமர்வு நேற்றைய தினம்(17-02-2021) புதன்கிழமை நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ்விழா அமர்விற்கு கல்லூரியின் முன்னாள் கணிதபாட ஆசிரியரும், வலந்தலை வடக்கு அ.மி.த.க.பாடசாலையின் ஓய்வுநிலை அதிபருமாகிய செல்வி விமலாதேவி விஸ்வநாதன் அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்ததுடன் பரிசில்களையும் வழங்கிவைத்திருந்தார்.
தரம்8, தரம்9 ஆகிய வகுப்புக்களில் பயிலும் மாணவர்களின் பாடரீதியான செயற்பாட்டிற்கான பரிசில்களே இவ்விழா அமர்வின்போது வழங்கப்பட்டிருந்தன.
இவ்விழாவின் இரண்டாம் நாள் அமர்வு வெள்ளிக்கிழமை(19-02-2021)நடைபெறவுள்ளது.
இப்பரிசளிப்பு விழாவானது மருத்துவகலாநிதி வி;.விஜயரத்தினம் நம்பிக்கை நிதியம் ஏற்படுத்தப்பட்ட பின்னர் அதன் அனுசரணையில் நடைபெறுகின்ற ஆறாவது பரிசளிப்பு விழாவாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்விழாவில் எடுக்கப்பட்டிருந்த சில புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
No Responses to “மருத்துவகலாநிதி வி.விஜயரத்தினம் நம்பிக்கை நிதியத்தின் அனுசரணையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவின் முதல்நாள் அமர்வு.”