காரை.இந்துவின் பரிசளிப்பு விழாவின் 2ஆம் நாள் அமர்வு வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் பிரார்த்தனை நிகழ்வைத் தொடர்ந்து எளிமையான முறையில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு முதன்மை விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் பொருளாளர் திரு.மா.கனகசபாபதி அவர்கள் சுகவீனம் காரணமாக கலந்துகொள்ளமுடியவில்லை. முதலாவது நாள் அமர்வில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டிருந்த கல்லூரியின் முன்னாள் கணிதபாட ஆசிரியையும், ஓய்வுநிலை அதிபருமாகிய செல்வி விமலாதேவி விஸ்வநாதன் அவர்கள் இரண்டாம் நாள்; அமர்விலும் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
கல்லூரியின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்கள் இவ்விழாவிற்கு தலைமை வகித்திருந்ததுடன் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து உரையாற்றினார். பரிசளிப்பு விழாக்கள், சாதனை மாணவர்களைக் கௌரவித்து பரிசளிப்பது மட்டுமல்லாது பரிசில்கள் பெறத் தவறியவர்கள் மத்தியில் சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தி சாதிக்கத் தூண்டுகின்றதும், மாணவர்களின் ஆளுமையில் செல்வாக்குச் செலுத்துகின்றதுமான முக்கியமான நிகழ்வு எனக் குறிப்பிட்டார். இதனை நன்கு உணர்ந்துகொண்ட எமது கல்லூரியின் பெருமைக்குரிய பழைய மாணவனான மருத்துவகலாநிதி வி.விஜயரத்தினம் அவர்கள் தமது பெயரில் நம்பிக்கை நிதியத்தினை தோற்றுவித்து மாணவ சமூகத்தின் முன்னேற்றத்திற்கு மகத்தான பணியைப் புரிந்துள்ளார். அவரது நிதியத்தின் அனுசரணையின் மூலம் ஏனைய கல்லூரிகளைக்காட்டிலும் எமது கல்லூரியைச் சேர்ந்த மாணவ சாதனையாளர்கள் சிறந்தமுறையில் பரிசில்களைப் பெற்று ஊக்குவிப்பைப் பெறுவதற்கான பெருவாய்ப்பினை ஏற்படுத்தித்தந்த மருத்துவகலாநிதி வி. விஜயரத்தினம் அவர்களிற்கும், இந்நிதியத்தினை உருவாக்க காரணமாகவிருந்து செயற்பட்ட பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளைக்கும் விசேட நன்றியை அதிபர் தெரிவித்துக்கொண்டார். ஞாபகார்த்தப் பரிசில்களை வழங்கி உதவிய பழைய மாணவர்களின் அன்பிற்பகுரிய உறவுகளை நினைவுகூர்ந்த அதிபர், அப்பரிசில்களை வழங்கி உதவியவர்களிற்கும் நன்றியினைக் கூறினார்.
பாடரீதியாக மூன்று தவணைகளிலும் அதிக மதிப்பெண்களைப் பெற்று தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களிற்கும், தேசியப் பரீட்சைகளான க.பொ.த.சாதாரணம், உயர்தரம் ஆகிய பரீட்சைகளில் சிறப்புச் சித்திபெற்ற மாணவர்களிற்கும், பல்கலைக்கழகம் சென்ற மாணவர்களிற்கும், தேசிய கல்வியியல் கல்லூரிக்குத் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களிற்கும் மருத்துவகலாநிதி வி.விஜயரத்தினம் அவர்களின் சிறப்புப் பரிசில்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டிருந்தனர்.
கணிதம், விஞ்ஞானம், சங்கீதம், வணிகமும் கணக்கீட்டுக் கல்வியும் ஆகிய பாடங்களில் A தர சித்தி பெற்றவர்களிற்கும், கல்லூரியின் சிறந்த மெய்வல்லுனர்களிற்கும், கல்லூரியின் அதிசிறந்த மாணவிக்கும் ஞாபகார்த்தப் பரிசில்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டிருந்தனர்.
2019ஆம் கல்வி ஆண்டில் மாணவர்கள் பெற்றுக்கொண்ட பெறுபேறுகளின் அடிப்படையிலேயே பரிசில்கள் பெற தகமையுள்ள மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டனர் என்ற வகையில், இக்காலப்பகுதியில் அதிபராகப் பணியாற்றிய திருமதி சிவந்தினி வாகீசன் அவர்களின் சிறப்பான சேவை இத்தருணத்தில் நன்றியுடன் நினைவுகூரப்படவேண்டியதாகும்.
விருந்தினராகக் கலந்துகொண்டிருந்த செல்வி.விமலாதேவி விஸ்வநாதன், கல்லூரியின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன், உப அதிபர் திருமதி அரூபா ரமேஸ், பகுதித் தலைவர்களான திரு.தெ.லிங்கேஸ்வரன், திருமதி ஜெகதாம்பிகை அருட்செல்வம் ஆகியோர் மாணவர்களிற்கான பரிசில்களை வழங்கி கௌரவித்தனர்.
தேசிய மட்டத்தில் வெற்றிபெற்று மருத்துவகலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் அவர்களின் சிறப்புப் பரிசில்களைப் பெற்றுக்கொண்டோர்:
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில்
‘A’ தரச் சித்தி
இல பெயர்
1 செல்வி வி. கஜந்தினி 8 A
2 செல்வி க. தர்சிகா 6 A
3 செல்வன் க. பகீரதன் 6 A
4 செல்வி யோ. அபிஷh 5 A
5 செல்வன் க. மோகனதாசன் 5 A
6 செல்வி க. சுகந்தினி 5 A
7 செல்வி சி. சர்வேஸ்வரன் 4 A
8 செல்வி க. தனுசிகா 4 A
9 செல்வி வி. விஜிதா 4 A
10 செல்வி பா. தர்ணிகா 4 A
11 செல்வன் சு. சுகிர்தன் 3 A
12 செல்வி ம. அபிதா 3 A
13 செல்வன் பு. சேந்தன் 2 A
14 செல்வன் நா. கிறிஸ்ரீன் A
15 செல்வன் க. லோஜினி A
16 செல்வி யோ. ருவேதிகா A
17 செல்வி செ. சோபிகா A
18 செல்வி சா. யுசிதா A
க.பொ.த உயர்தரப் பரீட்சையில்’A’ தரச் சித்தி
இல பெயர் பாடம்
1 செல்வி தே. கம்சிகா A இணைந்த கணிதம்
2 செல்வி சோ. உஷhந்தினி A பொருளியல்
3 செல்வன் பே. அலெக்சன் A தொடர்பாடலும் ஊடகக் கற்கையும்
4 செல்வி அ. எஸ்தர் A கிறிஸ்தவ நாகரிகம்
5 செல்வி சு. சிந்துஜா A நடனம்
6 செல்வி க. தமிழினி A இந்துநாகரிகம்
2019 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில்
திறமைச்சித்தி பெற்ற மாணவர்கள்
1. செல்வி வி. கஜந்தினி 8A B
2. செல்வி க. தர்சிகா 6A 3B
3. செல்வன் க. பகீரதன் 6A B 2C
4. செல்வி யோ. அபிஷh 5A 2B 2C
5. செல்வன் க. மோகனதாசன் 5A B 2C
6. செல்வி க. சுகந்தினி 5A B 3C
7. செல்வன் சி. சர்வேஸ்வரன் 4A 2B 2C
8. செல்வி க. தனுசிகா 4A 3B 2C
9. செல்வி வி. விஜிதா 4A 3B 2C
10. செல்வி பா. தர்ணிகா 4A 2B 2C
11. செல்வன் சு. சுகிர்தன் 3A 4B 2C
12. செல்வி ம. அபிதா 3A 3B 3S
2019 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் திறமைச்சித்தி பெற்ற மாணவர்கள்
1. செல்வி தே. கம்சிகா A B C கணிதத்துறை
2. செல்வி சோ. உஷhந்தினி A B C வணிகத்துறை
3. செல்வன் பே. அலெக்சன் A B C கலைத்துறை
4. செல்வி அ. எஸ்தர் A B C கலைத்துறை
5. செல்வி சு. சிந்துஜா A 2B கலைத்துறை
6. செல்வன் கோ. மிறோஜன் 2 B C தொழில்நுட்பத்துறை
7. செல்வன் க. கமலரூபன் A C S தொழில்நுட்பத்துறை
8. செல்வி ப. சிந்துஜா A C S தொழில்நுட்பத்துறை
9. செல்வி சி. தனுஜா 2B C கலைத்துறை
10. செல்வன் கு. வசந்தரூபன் 2B C விஞ்ஞானத்துறை
11. செல்வி த. பிரியங்கா 2B C வணிகத்துறை
12. செல்வி பா. குலமதி 2B S விஞ்ஞானத்துறை
13. செல்வி ம. துஸ்யந்தி B 2S கலைத்துறை
2019ஆம் ஆண்டில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள்
1. செல்வன் ச. கிருஸ்ணா – கொழும்புப் பல்கலைக்கழகம்
2. செல்வன் ச. சஜீவன் – ரஜரட்டைப் பல்கலைக்கழகம்
3. செல்வன் சி. தூயவன் – ஊவா பல்கலைக்கழகம்
4. செல்வி கி. பிரியா – யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
2016, 2017ம் ஆண்டுகளின் பெறுபேற்றின் அடிப்படையில் கல்வியியல் கல்லூரிக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்கள்
1. செல்வி க. அபிராமி
2. செல்வி க. சரண்சியா
3. செல்வி தே. றோமிலா
4. செல்வி ந. தீபிகா
இப்பரிசளிப்பு விழாவின்போது எடுக்கப்பட்டிருந்த புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
;
No Responses to “காரை.இந்துவில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவின் இரண்டாம் நாள் அமர்வில் பாடசாலை மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் தெரிவான மாணவ சதானையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.”