காரைநகர் இந்துக் கல்லூரியில் விஞ்ஞான பாடத்துடன் உயர்தர வகுப்பு மாணவர்களிற்கு இரசாயனவியல் பாடத்தினையும் சிறப்புறப் போதித்து மாணவர்கள் மனம் கவர்ந்த ஆசிரியராக விளங்குபவர் திரு.சண்முகம் அரவிந்தன் அவர்கள். அர்ப்பணிப்பு மிக்க இவரது கல்விச் சேவையினை வடமாகாணக் கல்வித் திணக்களம் அங்கீகரித்து ‘குருபிரதிபாபிரபா’ என்னும் நல்லாசிரியர் விருதினை 2017ஆம் ஆண்டு வழங்கி கௌரவித்திருந்தது. மாணவ சமூகத்திற்கான தனது கல்விப் பணியினை மேலும் விரிவாக்கி பயனுள்ளதாக அமைக்கும்பொருட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் முதுமாணிப் பட்டப்படிப்பினை(M.Ed.) மேற்கொண்ட திரு.சண்முகம் அரவிந்தன் அவர்கள், இப்பட்டத்தினை 25-02-2021இல் நiiடைபெற்ற யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின்போது பெற்றுக்கொண்டமை சிறப்பானதாகும்.
விஞ்ஞானப் பட்டதாரி என்பதுடன் பட்டமேற்படிப்பு கல்வி டிப்ளோமா சான்றிதழையும் பெற்ற திரு.அரவிந்தன் அவர்கள் தற்போது கல்வியியல் முதுமாணிப் பட்டத்தினைப் (M.Ed.) பெற்றுக்கொண்டமை குறித்து அவரை பாராட்டி வாழ்த்துவதில் பெருமையடைவதாக காரை.இந்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளை நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டமளிப்பு விழாவின்போது திரு.அரவிந்தன் அவர்களிற்கு கல்வியியல் முதுமாணிப் பட்டத்தினை வழங்கியபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தினை கீழே பார்வையிடலாம்:
No Responses to “யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கல்வியியல் முதுமாணிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்ட காரை.இந்துவின் ஆசிரியர் திரு.சண்முகம் அரவிந்தன்.”