காரைநகர் இந்துக் கல்லூரியின் முக்கியமான ஊட்டப் பாடசாலையாக விளங்குவது சுப்பிரமணிய வித்தியாசாலையாகும். அது மட்டுமல்லாது 1971ஆம் ஆண்டு தொடக்கம் பல ஆண்டுகள் காரை.இந்துவின் கனிஸ்ட பாடசாலையாகவும் இது இணைந்து செயற்பட்டமை நினைவுகூரத்தக்கதாகும். இப்பாடசாலையில் பணிபுரிந்த ஆசிரியர்கள் பலரும் புகழ்மிக்கவர்களாக காரைநகர் மக்களின் மனங்களில் இடம்பெற்று அவர்களது மதிப்பிற்கும் அன்பிற்கும் உரியவர்களாக விளங்குகின்றனர். அதேவேளை இவர்களிடம் ஆரம்பக் கல்வியைப் பயின்ற பெரும்பாலான மாணவர்கள் பலரும் காரை.இந்துவில் தமது கல்வியைத் தொடர்ந்து நல்ல நிலையில் இருந்து வந்துள்ளனர்.
சுப்பிரமணிய வித்தியாசாலையில் பயின்ற மாணவர்களையும், கற்பித்த ஆசிரியர்களையும்; நினைவுகூர்ந்து மீட்டிப் பார்க்கும் வகையில் அவர்கள் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றினை கீழே தரவேற்றம் செய்துள்ளோம். 1947ஆம் ஆண்டு பாடசாலையில் நடைபெற்ற பெற்றோர் தின விழாவின்போது இவ் அரிய புகைப்படம் பதிவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். விழாவில் இடம்பெற்ற கலை நிகழ்வுகளில் பங்கு பற்றிய மாணவர்களும், பாடசாலையில் கற்பித்த ஆசிரியர்களும், பாடசாலையின் முகாமைத்துவக் குழு உறுப்பினர்களும், விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட பிரபல சட்டத்தரணி அப்புக்காத்து குலசிங்கம் அவர்களுடன் இப்புகைப்படத்தில் காணப்படுகின்றனர். புகைப்படத்தில் உள்ளவர்களை இலகுவாக இனம் காணக்கூடியவகையில்; அடைப்புக் குறிகளுக்கிடையில் குறிப்புக்கள் தரப்பட்டுள்ளன.
புகைப்படத்தில் உள்ளவர்கள் தவறாக இனம் காணப்பட்டிருந்தால் அல்லது இனம் காணப்படாதவர்களை அறிந்திருந்தால் எமக்கு அறியத்தருவீர்களாயின் அவற்றை திருத்திப் பிரசுரிக்கக் காத்திருக்கின்றோம்.
இவ் அரிய புகைப்படத்தினை அனுப்பி உதவிய திரு.மகேசன் மனோராகவன் அவர்களிற்கும், புகைப்படத்தில் உள்ளவர்களை அடையாளம் கண்டு தகவல்களை வழங்கி உதவிய காரை.இந்துவின் பழைய மாணவர்களான ஓய்வுநிலை படவரைஞர் திரு.கந்தையா பரஞ்சோதி(படத்தில் காணப்படுபவர்) திருமதி புவனேஸ்வரி சிவசுப்பிரமணியம்(படத்தில் காணப்படுபவர்) ஆகியோருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.இப்புகைப்படத்தின் மூலப்பிரதியினை தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் திரு.கந்தையா பரஞ்சோதி அவர்கள் பாதுகாப்பாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
முன் வரிசையில் இருப்பவர்கள் (இடமிருந்து வலமாக)
1.மீனாட்சி (பல்லுக்கட்டி சங்கரப்பிள்ளையின் மகள்)
2.விசாலாட்சி(தண்டிகை கணபதிப்பிள்ளையின் மகள், மல்லிகம்மாவின் சகோதரி)
3.சரஸ்வதி(பேரார் சுப்பிரமணியம் மகள், காராளசிங்கத்தின் மனைவி)
4.புவனேஸ்வரி(சிவசுப்பிரமணியத்தின் மனைவி, சிவராமலிங்கத்தின் தாயார்)
5.சிவபாக்கியம்(பரியாரி இராசசேகரம் மனைவி)
6.கமலா(சுப்பிரமணியத்தின் மகள், திருவள்ளுவர் மாஸ்டரின் சகோதரி)
7.நாகரத்தினம்(வாட்டாளை நாகலிங்கத்தின் மகள்)
8.யோகாம்பிகை(மலேசியா-தண்டிகை நல்லதம்பியின் மகள், பரஞ்சோதி, C.T.B. தியாகராசா ஆகியோரின் மைத்துனி)
9.அடையாளப்படுத்தப்படமுடியவில்லை.
முழங்காலில் நிற்பவர்கள் (இடமிருந்து வலமாக)
1.மனோன்மணி(ஆறுமுகம் ரெக்ஸ்ரைல்ஸ் ஆறுமுகத்தின் மனைவி)
2.செல்லம்மா(விநாசித்தம்பியின் மனைவி, லண்டன் நாகேந்திரத்தின் தாயார்)
3.புவனேஸ்வரி(வல்லிபுரம் ரீச்சர்)
4.இராசலட்சுமி(மகேசனின் மனைவி, பாலாம்பிகை ரீச்சரின் சகோதரி)
5.பாலாம்பிகை( பாலாம்பிகை ரீச்சர், இராசநாயகத்தின் மனைவி)
6.லண்டன் குமாரின்(தவராசா) தாயார் நாகம்மாவின் சகோதரி
7.இராசம்மா(பழனி செல்லையாவின் மகள்)
8.அடையாளப்படுத்தப்படமுடியவில்லை.
9.இந்திராணி(வாட்டாளை நாகலிங்கத்தின் மகள்)
கதிரையில் இருப்பவர்கள் (இடமிருந்து வலமாக)
1.இராசம்மா-ஆசிரியை(தையலம்மா-கனகசுந்தரம் மாஸ்டரின் மனைவி, கனக சிவகுமாரனின் தாயார்)
2.தங்கரத்தினம் ரீச்சர்-ஆங்கில ஆசிரியை(தங்கோடை)
3.நெடுங்காசி சுப்பிரமணியம்-பாடசாலை முகாமைத்துவக் குழு உறுப்பினர்
4.ஓய்வுநிலை தபால் ஊழியர்(Postman) செல்வரத்தினம், சோமு ஆகியோரின் பேரன்-பாடசாலை முகாமைத்துவக் குழு உறுப்பினர்(புதுறோட்டு)
5.அப்புக்காத்து குலசிங்கம்-பிரதம விருந்தினர்
6.சுப்பிரமணியம் கந்தர்(பாடசாலை முகாமையாளர்)
7.அருளம்பலம்-ஆசிரியர்(பாடசாலை முகாமையாளர் கந்தரின் மகன்))
8.சண்முக வாத்தியார்-ஆசிரியர்(இடைப்பிட்டி)
9.வெற்றிவேலு ஐயம்பிள்ளை-ஆசிரியர்
10.காசிப்பிள்ளை-ஆசிரியர்
பின்னால் நிற்பவர்கள் (இடமிருந்து வலமாக)
1.பரஞ்சோதி(ஓய்வுநிலை படவரைஞர்- பரியாரி இராசசேகரத்தின் மைத்துனர்)
2.புண்ணியசிங்கம்(மயில்வாகனத்தின் மகன்- புதுறோட்டு)
3.அரசநாயகம்(மயில்வாகனத்தின் மகன்-புதுறோட்டு, முத்தையா சுப்பிரமணியத்தின் மருமகன்)
4.செல்வரத்தினம்(ஆசிரியர் அருட்செல்வத்தின் தந்தை, சுப்பையா வாத்தியாரின் மகன்)
5.சிவசங்கரன்(தேசியக் குருக்களின் மகன், காரை.இந்துவின் முன்னாள் லிகிதர்);
6.சுப்பிரமணியம்(துப்பாசி- Airforce மணியம்)
7.தியாகராசா(ஓய்வுநிலை C.T.B. சாலை முகாமையாளர்-புதுறோட்டு)
No Responses to “சுப்பிரமணிய வித்தியாசாலையில் 74 ஆண்டுகளிற்கு முன்னரரன அரிய தருணம் ஒன்றின் அரிய நிழற்படப் பதிவு.”