பாலாவோடை, களபூமி, காரைநகரை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்து, தற்போது கொழும்பில் வசித்து வந்தவரும், காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் செயலாளராக இன்றுவரை நீண்டகாலமாகப் பணியாற்றி கல்லூரியின் வளர்ச்சிக்கு பெரும் பங்களித்தவரும், கல்லூரியின் வளர்ச்சி சார்ந்து எமது சங்கத்துடன் தொடர்பில் இருந்து வந்தவரும், சமூக உணர்வாளரும், ஓய்வுநிலை நீர்ப்பாசனத் திணைக்கள் நிர்வாக உத்தியோகத்தருமாகிய திரு.தில்லையம்பலம் மார்க்கண்டு அவர்கள் 10-05-2021 திங்கட்கிழமை சிவபதம் அடைந்துள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
மார்க்கண்டு அவர்களின் இழப்பினால் ஆறாத் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை தெரிவிப்பதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய ஈழத்துச் சிதம்பரத்தில் சௌந்தராம்பிகை உடன் உறையும் சுந்தரேசப் பெருமானை பிரார்த்திக்கின்றது.
காரை.இந்து பழைய மாணவர் சங்கம், கனடா.
அன்னாரின் குடும்பத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள மரண அறிவித்தலை கீழே உள்ள இணைப்பினை அழுத்திப் பார்வையிடலாம்:
https://ripbook.com/thillaiyampalam-markandu-60998001cf779/notice/obituary-6099807de9344
No Responses to “ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்!”