மரண அறிவித்தல்திரு. நடராஜா செந்தில்வேல்
(ஆயிலி, காரைநகர். கனடா)
தோற்றம்: 15-09-1953 மறைவு: 10-05-2021
ஆயிலி, காரைநகரைப் பிறப்பிடமாகவும் பாரிஸ் – பிரான்ஸ், ஸ்காபுரோ – கனடா ஆகிய இடங்களை வசிப்பிடங்களாகவும் கொண்டிருந்த திரு நடராஜா செந்தில்வேல் அவர்கள் (உரிமையாளர், Sunset Grill, Ajax, Rossland) திங்கட்கிழமை (10-05-2021) அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார் காரைநகர், ஆயிலியைச் சேர்ந்த காலஞ்சென்ற சிவகுருநாதர் நடராஜா (சிறாப்பர்) – சவுந்தரம் தம்பதியினரின் இளைய மகனும்,
கனடாவில் வதியும் தாவடியைச் சேர்ந்த நாகலிங்கம் குலசேகரம் – கமலாதேவி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
குலசேகரி (செல்வி) அவர்களின் ஆருயிர் கணவரும்,
கஜவதனன் (கார்த்திக்), கவிராஜன், கோகுல் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சசிரேகா, தான்யா மென்டிஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இந்திராணி (சிட்னி), சிறிஸ்கந்தராஜா (இலண்டன்), காலஞ்சென்ற குகதாஸ் (சிவம்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற சிவசம்பு, சிறீதேவி (இலண்டன்), சரோஜினிதேவி (இலங்கை), பாலகுமார் (ஜேர்மனி), மோகனகுமார் (டென்மார்க்), சுரேஷ்குமார் (கனடா), சிவகுமார் (வேல்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிர்மலா, பிரபாகரன், ஜானகி (சிட்னி) ஆகியோரின் அன்பு மாமாவும்,
தனஞ்சயன் (இலண்டன்), கலைச்செல்வி (இலண்டன்), கலைவாணி (அமெரிக்கா), சுகன்யா (இலங்கை) ஆகியோரின் அருமைச் சித்தப்பாவும்,
கைரா, கைலன் ஆகியோரின் ஆசைப் பேரனும்,
நிரூஷன், ஹரீஷன், மீனாட்சி, வேந்தன், அருணன், வல்லவன், மாயோன் (சிட்னி), கீரன், லெய்லா, அன்ரன் (இலண்டன்), எல்லாளன் (இலண்டன்), அபிநயா (அமெரிக்கா); கர்ணிகா (இலங்கை) ஆகியோரின் சின்னத் தாத்தாவும் ஆவார்.
இறுதி மரியாதை மற்றும் இறுதிக்கிரியை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு (Livestreaming) செய்யப்படும்.
Live Link: Click Here
https://video.ibm.com/channel/s5CHH26bSXz
அன்னாரின் இறுதி மரியாதை நிகழ்வு 16-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 7:00 மணிமுதல் 10:00 மணிவரை இடம்பெறும் பின்னர் இறுதிக்கிரியை 17-05-2021 திங்கட்கிழமை அன்று மு . ப 10:00 மணிமுதல் 12:00 மணிவரை இடம்பெறும்.
தகனம் செய்யும் இடம்: Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gromley ON, L0U 1G0
கோவிட்-19 நெருக்கடி நிலைமை காரணமாக பார்வை, கிரியை நிகழ்வுகள் குடும்ப உறுப்பினர்களுடனேயே நடைபெறும்.
இவ் அறிவித்தலை ஏற்றுக்கொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
கார்த்திக் (மகன்); (416) 830 7020
No Responses to “மரண அறிவித்தல் – திரு. நடராஜா செந்தில்வேல்”