எமது கல்லூரியின் வரலாற்றில் பாரிய சோதனைக் காலமாக 1991-1995 ஆம் ஆண்டு காலப்பகுதி பதிவு செய்யப்பட்டிருக்கிறது., உள்நாட்டுப் போர்ச் சூழல் காரணமாக, 1991 ஏப்பிரலில் எமது கல்லூரியும் காரைநகரின் ஏனைய பாடசாலைகளும், எமது ஊரை விட்டு இடம்பெயர நேரிட்டது. இடப்பெயர்வுக்கு முன்னர் காரைநகரில் அமைந்திருந்த 14 பாடசாலைகளும் கொத்தணி நிர்வாக கட்டமைப்பின் கீழ் இயங்கி வந்ததுடன் இப்பாடசாலைகளிற்கு தலைமைப் பாடசாiலையாகவிருந்து செயற்பட்ட காரை இந்து கொத்தணிப்பாடசாலை என அழைக்கப்பட்டதுடன் இக்கல்லூரியின் அப்போதயை அதிபர், அமரர். மு.திருநீலகண்டசிவம் அவர்கள் கொத்தணி அதிபராகவும் தலைமை வகித்து சேவையாற்றிக் கொண்டிருந்தார்.
இடப்பெயர்வின்போது, எமது கல்லூரி யாழ்ப்பாணம் நாவலர் பாடசாலையில் இயங்கியது. அப்போது எமது கல்லூரி அதிபராகவும், கொத்தணி அதிபராகவும் கடமை ஏற்று அமரர். எஸ்.ஆர்.எஸ் தேவதாசன் அவர்கள் பணியாற்றினார். இந்த நெருக்கடியான காலப்பகுதியில் யாழ்நகரத்தில் வசித்து வந்த காரைநகரைச் சேர்ந்த ஏனைய பாடசாலை ஆசிரியர்களும், மாணவர்களும் எமது கல்லூரியில் தமது கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளைத் தொடர்ந்தனர்.
காரைநகரில் இருந்தபோது எமது சகோதர பாடசாலையாகிய யாழ்ற்ரன் கல்லூரியில் நீண்ட காலமாக ஆசிரியையாகப் பணியாற்றியவரும் நல்மாணர்க்காகள் பலரை உருவாக்கிய சிறந்த கணித ஆசிரியையும ஆகிய திருமதி. பரமேஸ்வரி கந்தையா அவர்களும் இக்காலப்பகுதியில் எமது கல்லூரியில் இணைந்து சேவையாற்றினார். இவர் 1993 இல் ஓய்வு பெற்றபோது எமது கல்லூரியினால் ஒரு பிரியாவிடை விருந்து உபசாரம் நடத்தப்பட்டது.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இங்கு காண்கிறீர்கள். இதில் எமது ஊரைச் சேர்நத பல ஆசிரிய மணிகளைக் காணலாம்.
இந்தப் படத்தை எமக்கு அனுப்பி வைத்து உதவிய பழைய மாணவர் சங்க கனடா கிளையின் உறுப்பினரும் கல்லூரியின் முன்னாள் ஆசிரியையுமான திருமதி. அனுசூயா ஞானகாந்தன B.A அவர்களுக்கு எமது நன்றி.
இவ்வாறான மேலும் பல கல்லூரியின் வரலாற்றுப் பதிவுகள் வாசகர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றன
No Responses to “ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு பெற்ற திருமதி. பரமேஸ்வரி கந்தையா அவர்களிற்கு நடத்தப்பட்ட பிரியாவிடை விருந்து உபாசார நிகழ்வின் நிழற்படப் பதிவு”