கல்லூரியின் பழைய மாணவரும் பிரித்தானியா-காரை நலன்புரிச் சங்கத் தலைவருமான திரு.பரமநாதர் தவராஜா அவர்கள் சென்ற மாதம் காரைநகருக்கு பயணம் மேற்கொண்டிருந்த போது எமது கல்லூரிக்கும் சென்றிருந்தார்.
கல்லூரியின் உடனடி நீண்ட காலத் தேவைகள் தொடர்பில் அதிபர் திருமதி. வாசுகி தவபாலன் அவர்களுடனும் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் தாய்ச் சங்க நிர்வாகத்தினருடனும் அளவளாவியிருந்தார்.
அப்போது தமிழர் பண்பாட்டிற்கமைய கல்லூரியின் விழாக்களையும் நிகழ்வுகளையும் மங்கல விளக்கேற்றி ஆரம்பிப்பதற்கு வசதியாக ஒரு குத்துவிளக்கு தேவை என்பதை உணர்ந்த திரு.பரமநாதர் தவராஜா அவர்கள் பெரிய அளவிலான அழகிய குத்து விளக்கினை வாங்கி கல்லூரி அதிபரிடம் அன்பளிப்பாக வழங்கியிருந்தார்.
நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்.
No Responses to “மங்கல விளக்கேற்றலுக்கு பயன்படக்கூடிய அழகிய குத்து விளக்கு காரை இந்து பழைய மாணவர் திரு.பரமநாதர் தவராசாவினால் கல்லூரி அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.”