வெள்ளவத்தையில் தலைமையகத்ததை கொண்டு பணியாற்றும் ஓம் கிரியா பாபாஜி யோக ஆரண்யம் நிலையத்தை சேர்ந்த உறுப்பினர்கள் காரை இந்துவின் மாணவர்கள் மத்தியில் யோகா பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கில் அறிமுக விளக்கவுரையினை வழங்கியிருந்தனர். நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரி அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் தலைமையில் நடைபெற்ற இவ் அறிமுக நிகழ்வில் காரைநகரைச் சோந்த திரு.ஆறுமுகம் ஜயா அவர்கள் யோகாவின் மூலமாக பெறக்கூடிய உன்னதமான பயன்கள் குறித்து விரிவான விளக்கத்தினை தமது உரையினூடாக மாணவர்களிற்கு வழங்கியிருந்தர்.
மேற்குறித்த நிலையத்திலிருந்து யோகா பயிற்சி பெற்று வருகின்ற சிலரும் இவருடன் வருகை தந்திருந்து இந்நிகழ்வில் கலந்துகொண்டதுடன் இவர்களுள் ஒருவரான கல்லூரியின் பழைய மாணவியும் முன்னாள் இலங்கை வங்கி உதவி முகாமையாளருமாகிய திருமதி சிவஞானம் பரம்சோதி அவர்களும் பிரித்தானியா-காரை நலன்பரிச் சங்க தலைவர் திரு பரமநாதர் தவராசா அவர்களும இந்நிகழ்வில்; கலந்தகொண்டு உரையாற்றியிருந்தனர்.
நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களை இங்கே அழுத்தி நீங்கள் பார்வையிடலாம்.
No Responses to “இந்துவின் மாணவர்களிற்கு யோகா பற்றிய அறிமுகம் ஓம் கிரியா பாபாஜி நிலையத்தினால் வழங்கப்பெற்றுள்ளது”