மாணவ முதல்வர்களுக்கும் வகுப்பு முதல்வர்களுக்கும் சின்னம் அணிவிக்கும் வைபவம் கல்லூரியின் நடராசா மண்டபத்தில் 27-02-2013 அன்று கல்லூரி அதிபர் திருமதி. வாசுகி தவபாலன் தலைமையில் சம்பிரதாய பூர்வமாக நடைபெற்றது. இவ் வைபவத்திற்கு சிறப்பு அதிதியாக காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு ஸ்ரீவிக்னேஸ்வரன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.
மாணவ முதல்வர்களுக்கான விண்ணப்பம் மாணவர்களிடமிருந்து பெறப்பட்டு அவர்களின் கல்விப் பெறுபேறு இணைப்பாடவிதானப் பெறுபேறு, வரவு ஒழுங்கு எனபனவற்றின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டது. நேர்முகப் பரீட்சையில் தெரிவான விண்ணப்பதாரிகள் தேர்தலில் போட்டியிட்டு மாணவர்களின் அதிகப்படியான வாக்குகளைப் பெற்ற முதல் இருபது பேர் மாணவ முதல்வர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர். இவ்வாறு தெரிவான மாணவ முதல்வர்களுக்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் அதிபர் உப-அதிபர் ஆகியோர் மாணவ முதல்வர்களுக்கான சின்னத்தை அணிவித்தனர்.
அடுத்து வகுப்பு முதல்வர்களுக்கான சின்னத்தை வகுப்பு ஒழுங்கின்படி அந்தந்த வகுப்பாசிரியர்கள் முறையே அணிவித்தனர்.
இந்த வைபத்தில் எடுக்கப்பட்ட படங்களை இங்கே பார்வையிடலாம்.
No Responses to “மாணவ முதல்வர்களுக்கும் வகுப்பு முதல்வர்களுக்கும் சின்னம் அணிவிக்கும் வைபவம்”