நாடு முழுவதிலும் 1000 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துகின்ற வேலைத்திட்டத்தின் கீழ் முதலாவது கட்டத்தில் காரைநகர் இந்துக் கல்லூரியும் உள்வாங்கப்பட்டு இக்கல்லூரியை தேசிய பாடசாலையாக இயங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறியப்படுகிறது. இதற்கு அடிப்படையாகத் தேவைப்படுகின்ற சில வசதிகளை மேம்படுத்தும்பொருட்டு ஒரு மில்லியன் ரூபாவினை மத்திய அரசின் கல்வி அமைச்சு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்நிதியைப் பயன்படுத்தி பின்வரும் வேலைகளை நிறைவு செய்யுமாறு கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1.தேசியப் பாடசாலை எனப் பெயர் பொறிக்கப்பட்டு கல்லூரியின் வடக்கு வளாகத்தில் அமைந்துள்ள பிரதான நுழை வாயிலை பொருத்தமான முறையில் மாற்றி அமைத்தல்.
2.குடிநீர் விநியோகத்தை மேம்படுத்துதல்.
3.வகுப்பறைகளிலுள்ள யன்னல்னளை சீரமைத்து சுவர்கள், கதவுகள் என்பவனவற்றிற்கு வர்ணம் பூசுதல்.
4.வகுப்பறைகளிற்கான மின் விநியோகத்தை மேம்படுத்துதல்.
5.மலசல கூடங்களிற்கான வசதிகளை மேம்படுத்துதல்.
6.பாடசாலையின் சுற்றுப்புறத்தை அழகுபடுத்துதல்.
7.பாதுகாப்பு அலுவலருக்கான அறை ஒன்றினை அமைத்தல்.
மேற்குறித்த வேலைகளிற்குப் பயன்படுத்தத் தேவையான நிதி ஒதுக்கீடு ஒரு மில்லியன் ரூபாவும் பாடசாலை அபிவிருத்திக் குழுவிற்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவித்த அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்கள் குறித்த வேலைகளை அடுத்த வாரத்தில் ஆரம்பித்து விரைவில் நிறைவு செய்வதற்கான துரிதமான நடவடிக்கைளை மேற்கொண்டு வருவதாக மேலும் தெரிவித்தார்.
No Responses to “காரை.இந்து தேசியப் பாடசாலையாக இயங்குவதற்குத் தேவையான வசதிகளை மேம்படுத்தும் பணிகள் ஒரு மில்லியன் ரூபா மதிப்பீட்டில் ஆரம்பிக்கப்படவுள்ளன.”