கடந்த டிசம்பர் 2014 க.பொ.த.(சா-த) பரீட்சையில் 8A, S என்ற முதன்மைப் பெறுபேற்றினை பெற்ற மாணவன் செல்வன்.தி. பார்த்தீபன், 6A,2B, S என்ற பெறுபேற்றினைப் பெற்ற செல்வி.சி.விதுசா, 5A,B,C,S என்ற பெறுபேற்றினைப் பெற்ற செல்வி க.அபிராமி 4 A வரையிலான பெறுபேறுகளைப் பெற்ற செல்வி.சி.விசாலினி, செல்வன். இ. பவானந்தன், செல்வி.யோ.டர்மிதா ஆகியோருக்கும் மற்றும் சிறப்புச் சித்தி பெற்று உயர்தர வகுப்பிற்கு செல்வதற்கான தகமையினைப் பெற்ற ஏனைய அனைத்து மாணவர்களுக்கும் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை தமது பாராட்டுக்களை கல்லூரி அதிபரும் பழைய மாணவர்களின் தாய்ச் சங்கத்தின் தலைவருமான திருமதி.வாசுகி தவபாலன் அவர்களுக்கு அனுப்பி வைத்த கடிதத்தில் தெரிவித்துள்ளது.
இவர்களுடைய சாதனையினால் கல்லூரி அடைந்துள்ள பெருமை குறித்து மகிழ்வுற்றிருக்கும் கல்லூரிச் சமூகத்துடன் கனடாக் கிளைச் சங்க உறுப்பினர்களும் இணைந்து கொண்டு இந்த மாணவர்களை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் அவர்களிற்கு வழங்கி உதவும் பொருட்டு தமது கிளை, முப்பதினாயிரம் ரூபாவினை(30,000 ரூபா) வழங்குவதாக தலைவர் திரு.மு.வேலாயுதபிள்ளை தெரிவித்துள்ளார்.
மேலும் இம்மாணவர்களின் சாதனைக்கு உறுதுணையாகவிருந்து கல்லூரியை வழிநடத்தி வரும் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களுக்கும் இம்மாணவர்களுக்கு அர்ப்பணிப்பான சேவையுணர்வுடன் கல்வி புகட்டிய அனைத்து ஆசிரியர்களுக்கும் கனடாக் கிளைச் சங்கம் தனது பாராட்டுகளையும் நன்றியினையும் தெரிவிக்கின்றது.
No Responses to “க.பொ.த.(சா-த) பரீட்சையில் முதன்மைச் சித்தி பெற்ற மாணவர்களுக்கு பழைய மாணவர் சங்க கனடாக் கிளை ஊக்குவிப்பு நிதி”