ஆன்மீகப் புரட்சியினை ஏற்படுத்திய ஒப்பற்ற சாதனையாளர்
மூதறிஞர் தத்துவ கலாநிதி பண்டிதர் க.வைத்தீஸ்வரக் குருக்கள்
அளப்பரிய ஆன்மிகப் பணியும் தமிழ்ப் பணியும் ஆற்றியதன் மூலம் தாம் பிறந்த காரை மண்ணிற்கு மட்டுமல்லாது தமது வளமான வாழ்விற்கு வழி காட்டிய கற்ற பாடசாலையான கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்திற்கும் பெரும் புகழ் சேர்த்த ஒப்பற்ற சேவையாளர் சிவஸ்ரீ க.வைத்திஸ்வரக் குருக்கள் அவர்கள் 100வது அகவையினை எட்டி வெகு விரைவில் நூற்றாண்டு விழாவினை காணவிருந்த வேளையில் சிவபதம் அடைந்துள்ளார் என்ற செய்தி அறிந்து பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை அதிர்ச்சியும் ஆழ்ந்த துயரமும் அடைந்துள்ளது.
அன்னார் காரை மண்ணிற்கு பத்தி என்கின்ற விதையினை விதைத்து உரமூட்டி வளர்த்ததுடன் பவள விழா கண்ட மணிவாசகர் சபையினை நிறுவி அதன் வளாச்சியில் இறுதி மூச்சுவரை ஈடுபட்டு ஆன்மிகப் புரட்சியினை ஏற்படுத்திய ஆளுமையும் பேரறிவும் மிக்க பெரும் சாதனையாளர். நாட்டின் உயர் கல்வி பீடமர்க கருதப்படும் யாழ் பல்கலைக் கழகம் தத்துவகலாநிதி என்கின்ற பட்டத்தினை வழங்கியிருப்பதும் அகில இலங்கை கம்பன் கழகம் மூதறிஞர் என்கின்ற கௌரவ பட்டத்தினை வழங்கியிருப்பதும் அன்னாரது தமிழறிவின் ஆழத்தினையும் சைவத் தமிழ்ப் பணியின் மகத்துவத்தினையும் உணர்த்துவதாக உள்ளன.
அன்னாரது இழப்பானது காரை மண்ணிற்கு மட்டுமல்லாது சைவத் தமிழுலகிற்கே பேரிழப்பாகும். என்றும் சிவ சிந்தனையுடன் வாழ்ந்து சிவனுடைய திருவடிகளை அடைந்து விட்ட அன்னாரது ஆத்மா சாந்தியடைய சௌந்தராம்பிகை சமேத சந்தரேசப் பெருமானை இறைஞ்சுவதுடன் ஆறொணாத் துயருற்றிருக்கும் அன்னாரது பிள்ளைகள் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் ஆறுதலையும் அனுதாபத்தினையும் பழைய மாணவர் சங்கத்தின கனடா கிளை தெரிவித்துக்கொள்கின்றது.
இவ்வாறு பழைய மாணவர் சங்க கனடாக் கிளை நிர்வாகத்தினால் வெளியிடப்பட்ட இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முழுமையான கண்ணீர் வணக்கப் பிரசுரத்தைக் கீழே காணலாம்.
No Responses to “மூதறிஞர் க.வைத்தீஸ்வரக் குருக்கள் அவர்களின் மறைவு குறித்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் கண்ணீர் வணக்கம்”