கடந்த சனிக்கிழமை(25.04.2015) அன்று நடைபெற்றிருந்த பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் பொதுக் கூட்டத்தில் சங்கத்தின் முகவரி மாற்றம், மற்றும் அனைத்துலக நாடுகளில் பரந்து வாழும் பழைய மாணவர்களும் நலன்விரும்பிகளும் சங்கத்தின் இணை உறுப்பினர்களாக (Associate Members) சேர்ந்து கொள்ள வழிவகுக்கும் யாப்புத் திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டு பொதுச் சபையினால் அங்கீகரிக்கப்பட்டிருந்தன என்ற செய்தியை எமது சங்கத்தின் அனைத்து பொதுச்சபை உறுப்பினர்களுக்கும் உலகெங்கும் பரந்து வாழும் எமது பாடசாலையின் நலன் விரும்பிகளுக்கும் அறியத்தருகின்றோம்.
அங்கீகரிக்கப்பட்டிருந்த யாப்புத் திருந்த முன்மொழிவுகள்
1) சங்கத்தின் முகவரி பின்வரும் முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.
3875 Sheppard Avenue, Apt#411, Scarborough, Ontario, M1T 3L6
2) சங்கத்திற்கான இணை உறுப்பினர்கள் (Associate Members) பிரிவு 4(b)
“இலங்கைக்கு வெளியே கனடா, அமெரிக்கா தவிர்ந்த ஏனைய நாடுகளில் வாழும் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், ஏனைய ஊழியர்கள் அல்லது இலங்கைக்கு வெளியே எந்த ஓரு வெளிநாட்டிலும் வாழும் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், ஏனைய ஊழியர்கள் ஆகியோரின் பிள்ளைகள் எவராவது விரும்புமிடத்து எமது சங்கத்தில் இணை உறுப்பினர்களாக (Associate Members) ஆக இணைந்து கொள்ள முடியும்.”
இந்தப் பிரிவின் ஆங்கில வடிவத்தைக் கீழே காணலாம்.
4(b) If any old students or teachers or other staff of the School domiciled in any other country other than Canada or U.S.A. and outside Sri Lanka or Children of Old Students or teachers or other staff of the School domiciled in any foreign Country outside Sri Lanka wish, he / she can apply and be enrolled as an Associate Member of this Association.
மேற்படி யாப்புத்திருத்த முன்மொழிவுகள் சங்கத்தின் பொதுக் கூட்டத்திற்கு முன்னர் போதியளவு கால அவகாசத்தில் பொதுச் சபை உறுப்பினர்களுக்கும் உலகெங்கும் பரந்து வாழும் பழைய மாணவர்களுக்கும், நலன்விரும்பிகளுக்கும் அறியத்தர முடியாமல் போனதையிட்டு எமது மனவருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
முழுமையான சங்கத்தின் திருத்திய யாப்பினை கீழே உள்ள இணைப்பில் அழுத்திப் பார்வையிடலாம்.
http://www.karaihinducanada.com/?page_id=2054
No Responses to “சங்கத்திற்கு இணை உறுப்பினர்களை(Associate Members) சேர்த்துக் கொள்ளும் யாப்புத் திருத்தம்”