செம்பாடு, தங்கோடை, காரைநகரைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்து தற்போது ஸ்காபுரோ, கனடாவில் வசித்து வந்தவரும் ஹற்றன் ஸ்ரீபாத கல்லூரி, கைலண்ட்ஸ் கல்லூரி, சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி ஆகிய பாடசாலைகளின் முன்னாள் விஞ்ஞான ஆசிரியரும், தேசிய கடதாசி ஆலைக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் நிதி முகாமையாளரும், Agro Marine Company யின் முன்னாள் பிரதம கணக்காளரும் ஆகிய எமது சங்கத்தின் மூத்த உறுப்பினர் திரு.முருகேசம்பிள்ளை பாலசுப்பிரமணியம் அவர்களின் மனைவியான திருமதி பாக்கியவதி (லீலா) அவர்கள் இன்று 03-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்துள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
அன்னாரது இழப்பினால் ஆறாத் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
காரை.இந்து பழைய மாணவர் சங்கம், கனடா.
No Responses to “ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்!”