காரை.இந்துவால் 1949ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வந்து கிடைக்கப்பெறாத ‘சயம்பு’ சஞ்சிகைகளை தேடிக்கண்டு பிடிக்கும் பணி முன்னெடுக்கப்பட்டு வந்ததில் 1949ஆம் ஆண்டு வெளிவந்த சஞ்சிகையைத் தவிர ஏனைய அனைத்து சஞ்சிகைகளின் மூலப் பிரதிகள் அவற்றினைப் பாதுகாத்து வைத்திருந்தவர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளன. பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையின் ஆதரவுடன் முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.கே.சதாசிவம் அவர்களின் முயற்சியினால் ஆறு சஞ்சிகைகளின் மூலப்பிரதிகள் பெறப்பட்டு அவற்றின் பிரதிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. 1950, 1951, 1952, 1956, 1960, 1969, ஆகிய ஆண்டுகளில் வெளியிடப்பெற்றிருந்த சஞ்சிகைகளின் மூலப் பிரதிகளே கிடைக்கப் பெற்றவையாகும். இச்சஞ்சிகைகள் ஒவ்வொன்றிலும் தயாரிக்கப்பட்ட பிரதிகளை திரு.எஸ்.கே.சதாசிவம் அவர்கள் கல்லூரியின் அதிபர் திரு. அ.ஜெகதீஸ்வரன் அவர்களிடம் கையளித்திருந்தார். காரைநகர் அபிவிருத்திச் சபை நூலகத்தில் வைக்கும் பொருட்டு அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கையைத் தொடர்ந்து சஞ்சிகைகளின் பிரதிகள் நேற்றைய தினம் காரை அபிவிருத்திச் சபைத் தலைவர் திரு.இ.சிவசுப்பிரமணியம் அவர்களிடம் ஓய்வுநிலை அதிபர் பண்டிதர் சு.வேலாயுதபிள்ளை அவர்களினால் கையளிக்கப்பட்டிருந்தது. நூலகத்தில் வைத்து கையளிக்கப்பட்ட தருணம் காரை அபிவிருத்திச் சபை நிர்வாக உறுப்பினர்களுடன் நூலகக்குழு உறுப்பினர்களும், கல்லூரியின் அதிபரும், பழைய மாணவர் சங்கத்தின் பொருளாளர் திரு.க.நிமலதாசன் அவர்களும் சமூகமளித்திருந்தனர்.
அதிபரினால் பழைய மாணவர் சங்க கனடாக் கிளைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நன்றி தெரிவிக்கும் கடிதம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
காரை.அபிவிருத்திச் சபைத் தலைவரிடம் பிரதிகள் கையளிக்கப்பட்ட சமயம் எடுக்கப்பட்ட புகைப்படம்:
‘சயம்பு’ சஞ்சிகைகளின் முகப்பு அட்டைகள்.
No Responses to “கல்லூரியின் நூலகத்திற்கும், காரை அபிவிருத்திச் சபையின் நூலகத்திற்கும் காரை.இந்துவின் வெளியீடான ‘சயம்பு’ சஞ்சிகையின் பிரதிகள் கையளிக்கப்பட்டுள்ளன.”