காரைநகர் இந்துக் கல்லூரி வரலாற்றுத் தகவல்கள்
-எஸ்.கே.சதாசிவம்-
“To Thine Own Self Be True”
நல்லூரில் வாழ்ந்த ஸ்ரீலஸ்ரீ.ஆறுமுகநாவலரின் தமையனார் புத்திரர் ஸ்ரீமத். த. கைலாயபிள்ளை அவர்களைக் கால்நடையாகச் சந்திக்க யாழ்ப்பாணம் செல்லும் வேளையில் வட்டுக்கோட்டை அமெரிக்க மிஷனரிமாரின் ஆங்கிலப் பாடசாலையில் (யாழ்ப்பாணக் கல்லூரி) கிறிஸ்தவர்களாகச் சேர்ந்து ஆங்கிலம் கற்று மலாய் நாடு சென்று பொருள் ஈட்டி வந்தமை அருணாசல உபாத்தியாயரின் மனதைத் தொடலாயிற்று. காரைநகரிலும் ஒரு சைவ ஆங்கிலப் பாடசாலையை உருவாக்க வேண்டுமென்பதன் அவசியத்தை காரைநகர் மாப்பாணவூரியைச் சேர்ந்த கந்தப்பர் இலட்சுமணபிள்ளை, சிதம்பரப்பிள்ளை கந்தப்பு, திரு. மு. கோவிந்தபிள்ளை ஆகியோருக்கு உணர்த்தினார். இதன் விளைவாக திரு. மு. கோவிந்தபிள்ளை பாடசாலைக்கான காணியை அன்பளிப்புச் செய்தார். அருணாசல உபாத்தியாரது உந்துதலால் மேற்குறித்த மூன்று பெரியார்களின் உதவியுடன் 1888ஆம் ஆண்டு ஸ்ரீமான் முத்து சயம்பு அவர்களினால் காரை.இந்து ஆங்கில வித்தியாசாலை என்ற பெயரில் தொடங்கப்பட்டதே தற்போதய காரைநகர் இந்துக் கல்லூரியாகும்.
133 ஆண்டுகள் கல்விப் பணியாற்றி காரைநகர் மக்களுக்கு சமூக அந்தஸ்த்தை பெற்றுக் கொடுத்த கல்லூரியில் கல்விப் பணியாற்றிய கல்வியாளர்கள், கல்லூரியின் வளர்ச்சிக்கு துணை நின்ற நன்கொடையாளர்கள், கல்லூரியின் முன்னோக்கிய பயணத்தில் செயலாற்றிய சமூகச் செயற்பாட்டாளர்கள், அனைவரையும் மனத்தில் இருத்தி நினைவு கூறல் காலத்தின் தேவையாகும்.
கீழே இணைக்கப்பட்டுள்ள பட்டியலில் காணப்படும் வரலாற்று தகவல்களின் பட்டியல் 2005ம் ஆண்டு சயம்பு சஞ்சிகை, 1950,1951,1952-53,1956,1960,1968-1969, 2013ம் ஆண்டுகளின் சயம்பு சஞ்சிகைகள், கல்லூரி தொடர்பான நூல்கள், ஆவணங்கள் கல்லூரியின் அதிபர்கள், கல்லூரியின் நலன்விரும்பிகள் ஆகியோரிடம் பெறப்பட்ட தகவல்கள், கல்லூரியில் மாணவனாகவும், ஆசிரியனாகவும் இருந்த காலத்தில் நினைவில் நின்றவைகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இப் பட்டியலில் குறிப்பிடப்பட்ட தகவல்களில் மாற்றம் செய்யப்பட வேண்டியவை இருப்பின் அல்லது உள்ளடக்கப்பட வேண்டியவை இருப்பின் ஆவணரீதியான தகவல்களுடன் தந்து உதவுமாறு வேண்டுகின்றேன். கல்லூரியின் வரலாற்று தகவல்கள் தொடர்பான ஆவணம் என்பதால் முறைப்படி அமைவதற்கு அனைவரினதும் கருத்துக்களை அறிய ஆவல் கொண்டுள்ளேன்.
எஸ்.கே.சதாசிவம் ;
E-Mail : satha.sham@yhoo.com,
Mobile, Viber, WhatsApp: 0775411722
வரலாற்றுச் சுவடுகளின் கோவை கீழே இணைக்கப்பட்டுள்ளது(13 பக்கங்களில்):
No Responses to “காரைநகர் இந்துக் கல்லூரியின் வளர்ச்சிப் பாதையில் ஏற்படுத்தப்பட்ட வரலாற்றுச் சுவடுகளின் கோவை – எஸ்.கே.சதாசிவம்.”