காரை.இந்துவின் வடக்கு வளாகத்துடன் இணைந்த கல்லூரிக்குச் சொந்தமான காணிகளின் பிரதான வீதியோடு அமைந்துள்ள தெற்கு எல்லைப் பகுதி, வேலியின்றி பாதுகாப்பற்றதாகக் காணப்பட்டது. கல்லூரியின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சியினாலும் பழைய மாணவர் சங்கத்தின் (தாய்ச் சங்கம்) ஒத்துழைப்புடனும் சங்கத்தின் பொருளாளர் திரு.நிமலதாசன் கணபதிப்பிள்ளை அவர்களின் மேற்பார்வையில் குறித்த 120 அடி நீளமான இவ்வெல்லைப் பகுதிக்கு முட்கம்பியிலான வேலி அமைக்கப்பட்டுள்ளது. இவ்வெல்லை வேலி அமைப்பதற்கு ஏற்பட்ட செலவினை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக்கிளை உறுப்பினர் ஒருவர் பொறுப்பேற்று சங்கத்தின ஊடாக உதவியிருந்தார்.
காணிகளைச் சுற்றிவரவுள்ள பின்பக்க எல்லை வேலிகள் கொழும்பு பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் தொழிலதிபர் திரு.சி.நேசேந்திரன் அவர்களின் நிதியுதவியுடன் சென்ற ஆண்டு அமைக்கப்பட்nருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
கல்லூரிக்குச் சொந்தமான காணிகளையும் எல்லை வேலிகள் அமைக்கப்பட்ட பகுதிகளையும் காண்பிக்கும் வரைபடம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.கறுப்பு நிறக் கோட்டினால் அடையாளமிடப்பட்ட பகுதியே அண்மையில் அமைக்கப்பட்ட தெற்குப்புற எல்லை வேலியாகும்.
பச்சை நிறக் கோட்டினால் அடையாளமிடப்பட்டுள்ள பகுதி தொழிலதிபர் திரு.சி.நேசேந்திரன் அவர்களின் உதவியுடன் அமைக்கப்பட்ட எல்லை வேலியாகும்.
தெற்கு எல்லையின் வேலி அமைக்கப்பட்ட பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில கீழே இணைக்கப்பட்டுள்ளன.
No Responses to “கல்லூரிக்குச் சொந்தமான காணிகளின் தெற்கு எல்லையில் முட்கம்பியிலான வேலி அமைக்கப்பட்டுள்ளது.”