அழகிய நுண்கலைகளில் ஒன்றான கர்நாடக இசை என்பது தனியே பாடுவதுடனும் கேட்பதுடனும் நின்றுவிடுவதில்லை. அதற்கு மேலாக நீண்ட வரலாற்றினையும் பல வடிவங்களையும் கொண்ட மிக ஆழமான இசை கர்நாடக இசையாகும்.
இத்தகைய உன்னதமான இசைக் கலையை உண்மையிலேயே ஆர்வத்துடன் பயிலும் மாணவர்கள் தமது வாழ்நாள் முழுவதையும் செலவிட்டு அதன் நுணுக்கங்களைப் பல்வேறு பரிமாணங்களில் பயில வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.
அந்த வகையில், கர்நாடக இசையைப் பயிற்றுவிப்பதில் அனுபவமும் ஆற்றலும் பயிற்சியும் மிக்க யாழ். பல்கலைக்கழக இசைத்துறை மூத்த விரிவுரையாளர் செல்வி.பரமேஸ்வரி கணேசன் M.A(Music), M.Phil(Music) அவர்களால் இம்மாதம் 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 இற்கு ஸ்காபுரோ நகரசபை மண்டபத்தில் நடத்தப்படவுள்ள பயிற்சிப் பட்டறை(Workshop) வாய்ப்பாட்டு இசை பயிலம் மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.
கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய(காரைநகர் இந்துக் கல்லூரி) பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் ஏற்பாட்டில் நடைபெறும் இப்பயிற்சிப்பட்றையில் பின்வரும் இரு தொனிப்பொருள்களில் பயிற்சிகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
1. குரலிசையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படைப் பயிற்சி முறைகள்
2. குரலிசையும் கமகங்களின் முக்கியத்துவமும்
இவ்வரிய வாய்ப்பினைத் தவறவிடாது இப்பயிற்சிப்பட்டறையில் பங்கபற்ற விரும்பும் இசை பயிலும் மாணவர்கள் தமது பெயர்களை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
பதிவுகளுக்கு:
திரு.மா.கனகசபாபதி (647)639-2930
திருமதி.செல்வா இந்திரராணி சித்திரவடிவேல் (647)407-6510
முழுமையான அறிவித்தலைக் கீழே காணலாம்.
No Responses to “கர்நாடக இசை பயிலும் மாணவர்களுக்கான பயிற்சிப்பட்டறை (Workshop)”