சில திட்டங்களின் பொருட்டு சென்ற ஆண்டு நொவம்பர் மாதம் கனடா பழைய மாணவர் சங்கத்தினால் எழுபதினாயிரம் ரூபா தாய்ச் சங்க நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. தீர்மானித்தபடி குறித்த சில திட்டங்களை செயற்படுத்தப்படமுடியாத சூழ்நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து வழங்கப்பட்ட நிதி பயன்படுத்தப்படாமலிருந்து வந்தது. சங்க நிர்வாகம் வேண்டிக்கொண்டதற்கிணங்க கனடா கிளையின் அங்கீகாரத்துடன் குறிப்பிட்ட நிதி சில உடனடித்தேவைகளை நிறைவு செய்ய பயன்படுத்தப்பட்டிருந்ததது. இந்நிதி செலவிடப்பட்ட விபரங்கள் வருமாறு:
மல-சல கூட குழி நிரம்பிவழிந்ததனால் துர்நாற்றம் வீச காரணமாகவிருந்த கழிவுகளை விசேட வாகனம் ஒன்றின்மூலம் அகற்றி துப்பரவு செய்யப்பட்டது.
1. நிலுவையிலிருந்த மின்கட்டணம்.
2. காரியாலய முகாமைத்துவ உதவியாளருக்கு சம்பள கொடுப்பனவு.
3. காகிதாதிகள் கொள்வனவு.
4. உதை பந்தாட்ட குழு போட்டியில் கலந்துகொள்ள சென்றுவந்தமை.
5. கல்லூரிக்கான விருந்தினர்கள் உபசரணை.
மேற்குறித்த செலவுகளின் விபர அறிக்கையினை அனுப்பிவைத்திருந்த தாய்ச் சங்க நிர்வாகம் மேலும் சில அவசிய தேவைகளின்பொருட்டு நிதி உதவிசெய்யுமாறு கேட்டுள்ளது. இவர்களது கோரிக்கை குறித்து இவ்வாரம் நிர்வாக சபை கூடி ஆராய்ந்து தீர்மானிக்கவுள்ளதாக கனடா கிளை சங்கத்தின் தலைவர் திரு.சி.தம்பிராசா தெரிவித்தார்.
No Responses to “பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை வழங்கிய நிதியிலிருந்து கல்லூரியின் உடனடி தேவைகள் சில நிறைவு மேலும் தேவைகளிற்கான கோரிக்கை முன்வைப்பு”