காரை.இந்துவில் எட்டாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் தாய் தந்தையை இழந்த நிலையில் வயோதிபப் பேத்தியாரின் பராமரிப்பில் இருந்து வருகின்றார். கல்லூரி அதிபரின் பரிந்துரைக்கேற்ப பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் நிர்வாக சபை உறுப்பினராகப் பணியாற்றி வருகின்ற முன்னாள் இலங்கை வங்கி உதவி முகாமையாளர் திரு.கனகரத்தினம் சிவபாதசுந்தரம் அவர்கள் முன்வந்து குறித்த மாணவியின் கற்றலுக்கு நிதி உதவியுள்ளார்.
இம்மாணவிக்கான உதவியின் முதலாவது பகுதிக் கொடுப்பனவினை கல்லூரி அதிபரின் ஏற்பாட்டில் கல்லூரியின் பழைய மாணவனும், பிரபல்யம் மிக்க கணித ஆசிரியரும் ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளருமாகிய திரு.என்.செல்வரத்தினம் அவர்கள் கல்லூரி அதிபரின் காரியாலயத்தில் வைத்து வழங்கியிருந்தார். ஓய்வுநிலை அதிபர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை, பழைய மாணவர் சங்கத்தின் பொருளாளரான தபாலதிபர் திரு.க.நிமலதாசன் மற்றும் மாணவியின் பேத்தியார் ஆகியோர் இதன்போது சமூகமளித்திருந்தனர்.
உதவியை வழங்கிய திரு.சிவபாதசுந்தரம் அவர்களிற்கும் இது விடயத்தில் ஆதரவளித்து ஒத்துழைத்த பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை நிர்வாகத்திற்கும் பாடசாலைச் சமூகத்தின் சார்பில் கல்லூரியின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் நன்றியினைத் தெரிவித்துக்கொண்டார்.
உதவி வழங்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்பபடத்தினை கீழே பார்வையிடலாம்.
No Responses to “தாய், தந்தையை இழந்த மாணவிக்கு பழைய மாணவர் சங்க கனடாக் கிளை கிளை உறுப்பினரால் கற்றலுக்கான உதவி வழங்கப்பட்டுள்ளது”