மரண அறிவித்தல்
திரு.சிவசம்பு சிவநேசன்
தோற்றம்: 05-03-1934 மறைவு: 24-10-2021
சந்தம்புளியடி, காரைநகரை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்து புதுறோட்டில் வசித்து வந்தவரான திரு.சிவசம்பு சிவநேசன் அவர்கள் 24-10-2021ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்ற சிவசம்பு, பொன்னம்மா தம்பதியினரின் அன்புப் புதல்வனும்
காலஞ்சென்ற கிருஸ்ணசாமி, தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ஜெயலட்சுமியின் ஆருயிர்க் கணவனும்,
காலஞ்சென்றவர்களான சிவகுமார், சிவசீலன் மற்றும் சிவாஜினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தவபாலன், பிரதீபா, ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாதனா, சகானா, சஜிவன், அஸ்விகா, ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, சிவபாதம், சிவநாயகம், சிவராசா, சிவலிங்கம், மற்றும் சிவராமன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 25-10-2021 திங்கட்கிழமை காலை புதுறோட்டிலுள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்ற பின்னர் சாம்பலோடை இந்து மயானத்தில பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளிற்கு,
சிவாஜினி (மகள் – பிரான்ஸ்) – +33148981359
தவபாலன் (மருமகன் – பிரான்ஸ்) – +33615334636
சிவராமன் (சகோதரன் – காரைநகர்) – +94213212484
சிவகரன் (சிவா) – (பெறாமகன் – கனடா) – + 1416 9300175
No Responses to “மரண அறிவித்தல் – திரு.சிவசம்பு சிவநேசன்”