29ஆண்டுகள் கல்விப் பணியாற்றி சென்ற ஒக்டோபர் 24ஆம் திகதி முதல் ஓய்வுபெற்றுள்ள காரை. இந்துவின் உப அதிபர் திரு.தெட்சணாமூர்த்தி லிங்கேஸ்வரன் அவர்களின் சேவைநலன் பாராட்டு விழாவும் 60வது பிறந்த தின விழாவும் கல்லூரியின் ஆசிரியர் நலன்புரிக் கழகத்தின் ஏற்பாட்டில் சென்ற 25-10-2021 ஆம் திகதி திங்கட்கிழமை கல்லூரியின் பல்லூடக அறையில் சிறப்பாக நடைபெற்றிருந்தது.
ஆசிரியர் திரு.அரவிந்தன் சண்முகம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது லிங்கேஸ்வரன் அவர்கள் ஆசிரியராவும், பகுதித் தலைவராகவும், உப அதிபராகவும் பதவிகள் வகித்து ஆற்றியிருந்த பணிகளை அதிபரும், பல ஆசிரியர்களும் பாராட்டி உரையாற்றியிருந்தனர். 60வது அகவை வாழ்த்துப்பாமாலை வாசித்தளித்தும் பொன்னாடை, மாலை என்பன அணிவித்தும் திரு.லிங்கேஸ்வரன் அவர்கள் கௌரவிக்கப்பட்டிருந்தார். அவரது 60வது பிறந்த நாளையும் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். கல்லூரியின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்கள் ஆசிரியர் நலன்புரிக் கழகத்தின் சார்பில் தங்கமோதிரம் ஒன்றினை அணிவித்து மதிப்பளித்திருந்தார். லிங்கேஸ்வரன் அவர்களின் கல்விப் பணிக்கு உறுதுணையாக இருந்து வரும் தற்போது கல்லுரியின் ஆசிரியையாகப் பணியாற்றி வருகின்ற அவரது துணைவியாரும் கணவருடன் இணைந்து கௌரவத்தினைப் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
No Responses to “ஓய்வுபெற்ற உப அதிபர் திரு.தெ.லிங்கேஸ்வரன் அவர்களின் சேவைநலன் பாராட்டு விழாவும், மணி விழாவும் ஆசிரியர் நலன்புரிக் கழகத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது.”