க.பொ.த.உயர்தரப் பரீட்சைக்கு 2020ஆம் ஆண்டு தோற்றி சித்தியடைந்த மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் விபரம் அண்மையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் இணையம் ஊடாக வெளியிடப்பட்டிந்தது. குறித்த வெட்டுப் புள்ளிகளின் அடிப்படையில் காரை.இந்துவிலிருந்து வெவ்வேறு துறைகளிற்கு மூவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்கள் அறியத் தந்துள்ளார்.
மொறட்டுவப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் துறைக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள செல்வி தேவராசா கம்சிகா நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் கல்லூரியிலிருந்து பொறியியல் துறைக்கு தெரிவான மாணவி என்ற பெருமையைப் பெற்றவராக விளங்குகின்றார்.
செல்வி இராசலிங்கம் கிருத்திகா, செல்வன் சோமசுந்தரம் யசிந்தன் ஆகியோரே பல்கலைக்கழகத்திற்கு தெரிவான ஏனைய இருவருமாவர்.
தெரிவுசெய்யப்பட்ட மாணவர்கள் கற்ற பிரிவு, தெரிவு செய்யப்பட்ட துறை, தெரிவுசெய்யப்பட்ட பல்கலைக்கழகம் என்பன குறித்த விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
இடதுபுறம்: செல்வி கம்சிகா தேவராசா
மத்தியில்: செல்வி கிருத்திகா இராசலிங்கம்
வலதுபுறம்: செல்வன் யசிந்தன் சோமசுந்தரம்.
குறித்த மாணவர்களையும் அவர்களிற்கு கற்பித்த ஆசிரி மணிகளையும் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக கிளை பாராட்டி வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறது.
No Responses to “நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் காரை.இந்துவிலிருந்து பொறியியல் துறைக்குத் தெரிவான மாணவி செல்வி கம்சிகா தேவராசா.”