கண்ணீர் அஞ்சலி
திருமதி நாகம்மா தம்பையா
எமது கல்லூரியின் பழைய மாணவரும், பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் முன்னாள் தலைவருமான திரு த. அம்பிகைபாகன் அவர்களின் பாசமிகு தாயார் திருமதி நாகம்மா தம்பையா அவர்கள் இறைபதம் அடைந்த செய்தி கேட்டு துயரடைகின்றோம். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது உற்றார, உறவினர்களுக்கு எமது கல்லூரி சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
திரு.த.அம்பிகைபாகன் அவர்கள் பழைய மாணவர் சங்கத்தினூடாகவும், தனிப்பட்ட ரீதியிலும் பாடசாலையின் வளர்ச்சிக்கு அளப்பரிய பணியாற்றியுள்ளார். அவர் கனடாவிலே வாழ்ந்தாலும் காரைநகருக்கு வரும் போதெல்லாம் பாடசாலையைத் தரிசித்து தேவைகளை அறிந்து பல அபிவிருத்தித்திட்டங்களை நிறைவேற்றியுள்ளார்.
பாடசாலைக்கு மட்டுமன்றி கிராமத்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கும் கற்றல் வழிகாட்டல்களை மேற்கொண்டுள்ளார். அத்தகைய சீரிய சமூகப் பணியாற்றக் கூடிய புத்திரர்களைப் பெற்றெடுத்த தாயார் இறைபதம் அடைந்தமையையிட்டு ஆழ்ந்த துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அதிபர்,
யா/கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வி.
No Responses to “திருமதி.நாகம்மா தம்பையா அவர்களின் மறைவு குறித்து கல்லூரி அதிபரின் கண்ணீர் அஞ்சலி”