புலம்பெயர்ந்து ஜேர்மன் நாட்டில் வாழ்ந்து வருகின்றவரும் பயிரிக்கூடல், காரைநகரைச் சேர்ந்தவரும் கல்லூரியின் பழைய மாணவனுமாகிய திரு.சுந்தரலிங்கம் சுதாகரன் அண்மையில் கல்லூரிக்குச் சென்றிருந்தார். கல்லூரி அதிபரின் பரிந்துரைக்கு அமைய க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றினைப் பெற்ற மாணவர்களுள் ஒருவரும் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த மாணவனுமான செல்வன் சசீகரன் தனுஜன் அவர்களிற்கு துவிச்சக்கர வண்டி ஒன்றினை அன்பளிப்புச் செய்து அவரது கற்றல் செயற்பாட்டிற்கு ஊக்குவிப்பினை வழங்கி உதவினார்.
குறித்த மாணவனிற்கு துவிச்சக்கர வண்டியினை வழங்கிவைத்தபோது கல்லூரியின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன், உப-அதிபர் திருமதி அரூபா ரமேஸ், ஆசிரியர் திரு.பிரதாப சர்மா ஆகியோர் உடனிருந்தனர். இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படம் கீழே இணைக்கப்பட்டுள்ளது:
No Responses to “புலம்பெயர்ந்து வாழும் பழைய மாணவன் ஒருவரின் உதவியுடன் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த மாணவனிற்கு துவிச்சக்கர வண்டி வழங்கப்பட்டது.”