செல்வி பரமேஸ்வரி கணேசன் அவர்களின் இன்னிசைக் கச்சேரியை வெற்றி நிகழ்வாக அமைப்பதற்கு ஆதரவு வழங்கிய பழைய மாணவர்கள் நலன் விரும்பிகள் ஆகியோருக்கு பழைய மாணவர் சங்க கனடா கிளையின் நெஞ்சார்ந்த நன்றி!
மங்கள விளக்கேற்றி நிகழ்வினை ஆரம்பித்துவைத்த மக்மாஸ்டர் பல்கலைக்கழக ஓய்வுநிலை பேராசிரியர் கலாநிதி தி.சிவகுமாரன் கனடா-காரை கலாசார மன்ற போசகர் சபை இணைப்பாளர் திரு.வே.இராசேந்திரமும் பாரியாரும் பாடசாலையின் மூத்த பழைய மாணவர் திரு.முருகேசு சின்னத்துரையும் பாரியாரும் ஆகியோருக்கும்
கடவுள் வணக்கம் கனேடிய தேசியகீதம் தமிழ்மொழி வாழ்த்து ஆகியவனவற்றை அழகுற இசைத்த செல்வி ராகவி மனோராகவன் அவர்களிற்கும்
பல்வேறு வேலைப்பழுவிற்கு மத்தியுpலும் தாம் பயின்ற பாடசாலைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற நோக்கோடு எமது அழைப்பினை ஏற்று பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்த இதயநோய் மருத்துவநிபுணர் மருத்துவகலாநிதி ராதகோபாலன் செல்வரத்தினம் அவர்களிற்கும்
கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்த் Double Seal Insulating Glass Ltd உரிமையாளர் தொழிலதிபர் திரு. மகாதேவன் பாலசுப்பிரமணியம் அவரது பாரியார் திருமதி பவானி ஆகியோருக்கும்
தாம் பயின்ற பாடசாலையின் மேம்பாட்டிற்கு உதவிடவேண்டும் என்ற நன்றியுணர்வுடன் பல்வேறு சிரமங்களிற்கு மத்தியிலும் ஈழத்திலிருந்து வருகை தந்து இசை ரசிகர்கள் வியக்கும் வகையில் அருமையான இசை நிகழ்வினை மண்டபம் நிறைந்த ரசிகர்கள் மத்தியில் வழங்கி கல்லூரிக்கும் பழைய மாணவர்களிற்கும் மட்டுமல்லாது காரைநகர் மக்களிற்கும் பெருமை சேர்த்த யாழ் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் செல்வி பரமேஸ்வரி கணேசன் அவர்களிற்கும்
செல்வி பரமேஸ்வரி அவர்களின் இன்னிசைக்கு அணிசேர்த்தது மட்டுமல்லாது தாம் பெற்றுக்கொண்ட சன்மானத்தொகையினை பாடசாலை மேம்பாட்டு நிதிக்கு வழங்கி உதவிய காரைநகர் தந்த வளர்ந்து வரும் மிருதங்க கலைஞர் யாழ்ப்பாணம் திரு.செந்தூரன் தர்மராசா அவர்களிற்கும்
வயலின் இசை வழங்கி அணிசேர்த்த பிரபல வயலின் இசைக்கலைஞர் வயலின் வித்துவான் திரு.யு.ஜெயதேவன் அவர்களிற்கும்
செல்வி பரமேஸ்வரியையும் அணிசேர் கலைஞர்களையும் பாராட்டி உரைவழங்கி சிறப்பித்த சங்கீதபூசணம் பொன்.சுந்தரலிங்கம் அவர்களிற்கும்
செல்வி பரமேஸ்வரி அவர்களின் விமானப் பயணச்சீட்டிற்கான செலவினை பொறுப்பேற்றுக்கொண்டு அனுசரiணை வழங்கி உதவிய குழந்தைவைத்திய நிபுணர் மருத்துவகலாநிதி வி.விஜயரத்தினம் அவர்களிற்கும்
செல்வி பரமேஸ்வரி அவர்களிற்கான சன்மானத் தொகையினையும் பக்கவாத்தியங்களிற்கான அனுசரணையினையும் வழங்கி உதவிய தொழிலதிபர் மகாதேவன் பாலசுப்பிரமணியம் அவர்களிற்கும்
நிகழ்வின் மண்டபம் மற்றும் ஒலி அமைப்பிற்கான அனுசரணையினை வழங்கியிருந்த மருத்துவகலாநிதி இராமலிங்கம் செல்வராசா அவரது பாரியார் மருத்துவகலாநிதி திருமதி.சறோ செல்வராசா ஆகியோருக்கும்
நிகழ்வின் நோக்கத்தினை அடைவதற்கு மேலும் அனுசரணை வழங்கி உதவியவர்களான இதயநோய் வைத்திய நிபுணர் மருத்துவகலாநிதி ராதகோபாலன் செல்வரத்தினம் அவர்களிற்கும் பிரபல வீடு விற்பனை முகவர் திரு ரவி ரவீந்திரன் அவர்களிற்கும்காசிப்பிள்ளை சக புத்திரர்கள் துரித பணமாற்றுச் சேவை நிறுவனத்தின் திரு.முருகேசு காசிப்பிள்ளை அவர்களிற்கும் பிரபல வீடு விற்பனை முகவர் திரு.ராஜ் நடராசா அவர்களிற்கும் பிரபல மோட்டார் வாகன விற்பனை முகவர் திரு.அண்டி திருச்செல்வம் அவர்களிற்கும்ஜக்கிய அமெரிக்க இராச்சியத்தில் பொறியியலாளராக பணியாற்றும் திரு.சிற்றம்பலம் திருஞானசம்பந்தன் அவரது பாரியார் நிர்மலாதேவி ஆகியோருக்கும்
karainews.com இணையத்தள சேவையின் இணைப்பாளர் திரு.பிரமேந்திரதீசன் திரவியநாதன் அவர்களிற்கும்
செல்வி பரமேஸ்வரிக்கான விசா அனுமதியினை பெறுவதற்கு பொறுப்பேற்றல் கடிதத்தினை வழங்கி ஆதரவளித்தவரும் கனடா வருமான வரிப்பகுதியில் கணக்காளராக பணிபுரிபவரும் எமது சங்கத்தின் நலன் விரும்பியுமாகிய திரு.கந்தையா கனகராசா அவர்களிற்கும்
செல்வி பரமேஸ்வரியை தமது இல்லத்தில் தங்கவைத்து அனைத்து வசதிகளையும் செய்து உதவியவரும் செல்வி பரமேஸ்வரியுடன் தொடர்பாடல்களை மேற்கொண்டிருந்தவருமாகிய பழைய மாணவர் சங்கத்தின் பொருளாளர் திரு. மா.கனகசபாபதி அவர்களிற்கும்
பரமேஸ்வரி கணேசனின் நேர்காணலை ஏற்பாடுசெய்தும் நிகழ்வின் விளம்பரத்தை ஒலி ஒளி பரப்பியும் நிகழ்விற்கு வலுச்சேர்த்த ஊடகங்களான CTBC வானொலி CTR வானொலி கீதவாணி வானொலி CMR பல்கலாசார வானொலி TVI தொலைக்காட்சி ஆகியவற்றிற்கும்
வாழ்த்துச்செய்தி அனுப்பி ஆதரவளித்து ஊக்கிவித்த பாடசாலையின் அதிபர் வாசுகி தவபாலன் அவர்களிற்கும் மற்றும் கனடா-காரை கலாச்சார மன்றம் காரைநகர் கிழவன்காடு கலா மன்றம் பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கம் சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை ஆகிய எமது நேச அமைப்புக்களிற்கும்
வுpளம்பரத்தினையும் செல்வி பரமேஸ்வரி கணேசனின் கனடாவிற்கான வருகை குறித்த செய்திகளையும் கட்டுரைகளையும்சங்கத்தின் இணையத்தளமான karaihinducanada.com என்ற சங்கத்தின் இணையத்தளத்தில் பிரசுரித்து சிறப்பாக பணியாற்றியிருந்த இணையத்தள சேவையின் நிர்வாகி திருமதி கிருஷ்ணவேணி சோதிநாதன் அவர்களிற்கும்
நிகழ்வு தொடர்புபட்ட அனைத்து விடயங்களையும் புpரசரித்து ஆதரவளித்த ஏனைய இணையத்தளங்களான கனடா-காரை கலாச்சார மன்றத்தின் karainagar.com மற்றும் karainews.com, karainagar.co ஆகியவற்றிற்கும்
நிகழ்வினை சிறப்பாக அமைப்பதற்கான ஆலோசனைகளையும் பல்வேறு உதவிகளையும் வழங்கி ஒத்துழைத்த சங்கீதவித்துவான் திருமதி பராசத்தி விநாயகதேவராசா பல்கலைவித்தகர் திரு. வர்ணராமேஸ்வரன் ஆகியோருக்கும்
இலவசமாக வீடியோ படம் எடுத்துதவிய திருமதி சத்தியசொரூபி தீபன் அவர்களிற்கும்
இலவசமாக புகைப்படம் எடுத்துதவிய ஆறுமுகம் சோதிநாதன் திருமதி கிருஷ்ணவேணி சோதிநாதன் ஆகியோருக்கும்
பாராட்டும் படியான சிறந்த ஒலி அமைப்பினை செய்து உதவிய யது அவர்களிற்கும்
அரங்க மண்டபத்தினையும் அது சார்ந்த அனைத்து வசதிகளையும் வழங்கி ஒத்துழைத்த கனடா கந்தசுவாமி கோவில் நிர்வாகத்திற்கும்
நிகழ்வுகளை சிறப்பாக தொகுத்து வழங்கி நிகழ்விற்கு சிறப்புச்சேர்த்த திரு.பா.ஞானபண்டிதன் அவர்களிற்கும்
அனுமதிச் சீட்டினை பெற்று பாடசாலை மேம்பாட்டிற்கு உதவிய பழைய மாணவர்கள் நலன் விரும்பிகள் அனைவருக்கும்
கனடாவிற்கு வெளியில் விடுமுறையில் சென்றிருந்த போதும் தினமும் தொலைபேசி வாயிலாக தொடர்பிலிருந்து
ஆலோசனை வழங்கி ஊக்கிவத சங்கத்தின் தலைவர் திரு.மு.வேலாயுதபிள்ளை அவர்களிற்கும்
நிகழ்வினை சிறப்பாக ஒழுங்கமைப்பதற்கு ஆலோசனை வழங்கி ஊக்கிவித்த போசகர் சிவநெறிச்செல்வர் தி.விசுவலிங்கம் அவர்களிற்கும்
இந்த நிகழ்வினை வெற்றி நிகழ்வாக அமைப்பதற்கு ஆதரவும் ஒத்துழைப்பும் உதவிகளும் வழங்கியிருந்த இங்கு பெயர்கள் குறிப்பிடத் தவறிய அனைத்து நல்லுள்ளங்களிற்கும் பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றது.
No Responses to “செல்வி பரமேஸ்வரி கணேசன் அவர்களின் இன்னிசைக் கச்சேரியை வெற்றி நிகழ்வாக்கிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி!”