காரை.இந்துவில் இரண்டு திறன் வகுப்பறைகளைக் கொண்ட கட்டிடத்திற்கான அடிக்கல் சென்ற 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் முன்னாள் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்களின் தலைமையில் முன்னாள் தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் திரு இளங்கோ அவர்களினால் நாட்டி வைக்கப்பட்டிருந்தது. தற்போது இக்கட்டிடத்தின் நிர்மாணப் பணிகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டு கல்லூரி நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இதற்கான சாந்தி பூசை சென்ற 16-11-2021 அன்று செய்யப்பட்டிருந்தது.
கல்லூரியின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்களின் ஏற்பாட்டில் மடத்துக்கரை முத்துமாரி அம்பாள் ஆலயத்தின் பிரதம குரு பிரம்மஸ்ரீ.கு.சரவணபவானந்த சர்மா அவர்களும் இவரது சகோதரர் பிரம்மஸ்ரீ பிரதாப சர்மா அவர்களும் இச்சாந்தி பூசையினைச் சிறப்பாகச் செய்து வைத்திருந்தனர்.
கல்லூரியின் வடக்கு வளாகத்தின் கிழக்கு எல்லையில் லண்டன் காரை நலன்புரிச் சங்கத்தின் உதவியுடன் கொள்முதல் செய்யப்பட்டிருந்த நிலத்திலேயே இத்திறன் வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இத்திறன் வகுப்பறைகளிற்குத் தேவையான உபகரணங்களையும் தளபாடங்களையும் பெற்றுக்கொள்வதற்கு திணைக்கள அதிகாரிகளுடன் தொடர்பிலிருந்து வருவதாக அதிபர் தெரிவித்தார்.
சாந்தி பூசையின்போது எடுக்கப்பட்ட புகைப் படங்கள் சில கீழே இணைக்கப்பட்டுள்ளன.
No Responses to “திறன் வகுப்பறைக் (Smart Classrooms) கட்டிட நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்பட்டு சாந்தி பூசை செய்யப்பட்டது.”