பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் பொதுக்கூட்டம் இறுதியாக சென்ற 21-04-2019இல் நடைபெற்றிருந்தது. சங்கத்தின் யாப்பு விதிக்கு அமைய புதிய நிர்வாக சபையினைத் தெரிவதற்கான பொதுக்கூட்டம் 2020ஆம் ஆண்டு கூட்டப்பட்டிருக்க வேணடுமாயினும் கோவிட்-19 நெருக்கடி நிலை காரணமாக இப்பொதுக் கூட்டடத்தினை கூட்டமுடியாத நிலை இருந்து வந்துள்ளதை அனைவரும் புரிந்துகொண்டிருப்பீர்கள். அண்மையில் சங்கத்தின் நிர்வாக சபை இணையவழி ஊடாக நடாத்தியிருந்த கூட்டத்தில் பொதுக் கூட்டத்தினைக் கூட்டுவது குறித்து விரிவாக ஆராய்ந்திருந்தது. இந்நிர்வாக சபைக்கூட்டத்தில் ஒருவர் தவிர அனைத்து நிர்வாக சபை உறுப்பினர்களுடன் சங்கத்தின் போசகர், கணக்காய்வாளர் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். இந்த ஆண்டு நிறைவுறுவதற்கு ஒரு மாத காலமே இருப்பதனால் அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில் பொதுக் கூட்டத்தினைக் கூட்டுவது நிறைவுடையதாக அமையும் என்ற கருத்தினை அனைவரும் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதெனத் தீர்மானிக்கப்பட்டது. 2019, 2020 ஆகிய இரண்டு ஆண்டுகளிற்குமான வரவு-செலவு அறிக்கைகள், செயற்பாட்டு அறிக்கைகள் என்பன முறையே பொருளாளர், செயலாளர் ஆகியோரினால் சமர்ப்பிக்கப்பட்டு அவை சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 2021ஆம் ஆண்டுக்குரிய அறிக்கைகளும் தயாரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் 2019, 2020, 2021 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கான அனைத்து அறிக்கைகளும் பொதுக்கூட்டத் திகதிக்கு முன்னதாக உறுப்பினர்களிற்கு அனுப்பிவைப்பதெனவும் மேலும் சபையினால் தீர்மானிக்கப்பட்டது. இவ் அறிக்கைகளுடன் பொதுக்கூட்டம், நிர்வாக சபைக்கு புதிய உறுப்பினர்களுக்கான விண்ணப்பங்கள் கோருதல் என்பன குறித்த விபரங்களும் அனுப்பிவைக்கப்படவுள்ளன.
அன்பான வேண்டுகோள்.
நிலுவையாகவுள்ள உறுப்புரிமைப் பணத்தினை செலுத்தியுதவுமாறு நாம் விடுத்த வேண்டுகொளைத் தொடர்ந்து பல அங்கத்தவர்களும் முன்வந்து அதனைச் செலுத்தி வருவது மகிழ்ச்சியளிப்பதாகவுள்ளது. இதுவரை உறுப்புரிமைப் பணத்தினைச் செலுத்தாதிருக்கும் ஏனைய உறுப்பினர்களும் இவ்விடயத்தில் கவனம் செலுத்தி உதவுமாறு அன்பாக வேண்டிக்கொள்கின்றோம். அதேவேளை இதுவரை உறுப்புரிமையைப் பெறாதிருக்கிள்ற பழைய மாணவர்களையும் உறுப்புரிமையைப் பெற்றுக்கொண்டு கல்லூரியின் மேம்பாட்டில் பங்குகொள்ளுமாறு தயவாக வேண்டிக்கொள்கின்றோம்.
இயன்ற நன்கொடைகளும் வரவேற்கப்படுகின்றது. தற்போது நிலைமை சீரடைந்து பாடசாலைகள் மீளத் திறக்கப்பட்டு கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் நடைபெற்று வருவதனால் நீங்கள் முன்வந்து வழங்கும் இயன்ற நன்கொடைகள் கல்லூரியின் வளர்ச்சி சார்ந்து முக்கியமான பணிகளை முன்னெடுப்பதற்கு உதவியளிப்தாகவிருக்கும்.
நிர்வாக சபை
காரை.இந்து பழைய மாணவர் சங்கம், கனடா.
உறுப்புரிமைப் பணத்தினை செலுத்துவது, உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்வது என்பன தொடர்பிலான அனைத்து விபரங்களையும் கீழே உள்ள இணைப்பினை அழுத்திப் பார்வையிடலாம்:
https://www.karaihinducanada.com/?page_id=1756
No Responses to “பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை உறுப்பினர்கள், நலன் விரும்பிகள், பழைய மாணவர்கள் ஆகியோருக்கான அறிவித்தலும் அன்பான வேண்டுகோளும்.”