பிரித்தானியா லண்டன் பல்கலைக்கழக தகவலியல் துறைப் பேராசிரியரான ஆறுமுகம் நல்லநாதன் அவர்கள் உலகில் மிகப்பெரிய தொழில்நுட்பத்துறைசார் நிபுணர்களின் நிறுவனமான மின் மற்றும் இலத்திரனியல் பொறியியல் நிறுவனத்தின் (IEEE) 16வது சர்வதேச மாநாட்டிற்கு கௌரவ விருந்தினராக அழைக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளார். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மின் மற்றும் இலத்திரனியல் பொறியியல் துறையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இம்மாநாடு நேற்றைய தினம் இணையம் ஊடாக நடைபெற்றிருந்து
பேராசிரியர் நல்லநாதன் அவர்கள் 2016ஆம் ஆண்டு IEEE நிறுவனத்தின் “Fellow” உறுப்பினர் என்ற தகுதியைப் பெற்றுக்கொண்டு சாதனை படைத்தவர். சிறீலங்காவிலிருந்து IEEE Fellow உறுப்பினர் என்ற தகமையைப் பெற்றுள்ள பத்து உறுப்பினர்களுள் பேராசிரியர் நல்லநாதன் அவர்களும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். IEEE Fellow உறுப்பினர் என்ற தகமை தொழில்நுட்ப சமூகத்தினால் வழங்கப்படுகின்ற அதிசிறந்த கௌரவமாகவும் முக்கியமான தொழில்த்துறைச் சாதனையாகவும் பார்க்கப்படுவதாகும். பேராசிரியர் நல்லநாதன் அவர்கள் IEEE நிறுவனத்தின் சர்வதேச மாநாட்டிற்கு கௌரவ விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தமை அவருக்கு மீண்டும் கிடைத்த ஒரு உயரிய கௌரவமாகும்.
காரைநகர் இந்துக் கல்லூரியின் மகிமைமிக்க பழைய மாணவனான பேராசிரியர் ஆறுமுகம் நல்லநாதன் அவர்களிற்குக் கிடைத்த உயர்ந்த கௌரவம் குறித்து பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை மகிழ்ச்சியும் பெருமையும் அடைவதுடன் அவர் மேலும் பல சாதனைகள் படைத்து கல்லூரி அன்னைக்கு பெருமை சேர்க்கவேண்டும் என வாழ்த்துகிறது.
மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவினால் வெளியிடப்பட்டிருந்த நிகழ்ச்சி அட்டவணை கீழே இணைக்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் நல்லநாதன் அவர்கள் IEEE நிறுவனத்தின் Fellow உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தமை குறித்து இவ்விணையத்தளத்தில் 2016ஆம் ஆண்டு பிரசுரிக்கப்பட்டிருந்த செய்தியை கீழே உள்ள இணைப்பினை அழுத்திப் பார்வையிடலாம்:
https://www.karaihinducanada.com/?p=5566
No Responses to “காரை.இந்துவின் மகிமைமிக்க பழைய மாணவனான பேராசிரியர் ஆறுமுகம் நல்லநாதன் அவர்களிற்கு மீண்டும் ஒரு முறை கிடைக்கப்பெற்ற உயர்ந்த கௌரவம்.”