கர்நாடக இசையைப் பயிற்றுவிப்பதில் அனுபவமும் ஆற்றலும் பயிற்சியும் மிக்க யாழ். பல்கலைக்கழக இசைத்துறை மூதுநிலை விரிவுரையாளர் செல்வி.பரமேஸ்வரி கணேசன் M.A(Music), M.Phil(Music) அவர்களால் கடந்த (28.06.2015) அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 இற்கு ஸ்காபுரோ நகரசபை மண்டபத்தில் நடத்தப்பட்ட பயிற்சிப் பட்டறை(Workshop) வாய்ப்பாட்டு இசை பயிலும் மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பாக அமைந்திருந்தது.
கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்பயிற்சிப்பட்றையில் பின்வரும் இரு தொனிப்பொருட்களில் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
1.குரலிசையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படைப் பயிற்சி முறைகள்
2. குரலிசையும் கமகங்களின் முக்கியத்துவமும்
ரொரன்ரோவில் கர்நாடக இசை பயின்றுவரும் மாணவர்கள் ஆர்வத்துடன் இப்பயிற்சிப் பட்டறையில் பங்குபற்றிப் பயன்பெற்றனர். வாய்ப்பாட்டு இசை கற்கும்போது குரலிசையில் கடைப்பிடிக்க வேண்டிய நுணுக்கங்களைச் செயல் முறையுடன் விரிவுரையாளர் செல்வி பரமேஸ்வரி அவர்கள் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்திருந்தமை குறிபபிடத்தக்கது.
கர்நாடக சங்கீதம் பயிலும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இப்பயிற்சிப் பட்டறை அமைந்திருந்ததாக பெற்றோர் தரப்பில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.
பயிற்சிப்பட்டறையில் எடுக்கப்பட்ட படங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்.
No Responses to “கர்நாடக இசை பயிலும் மாணவர்கள் பயன்பெற்ற பயிற்சிப்பட்டறை (Workshop)”