காரைநகர் இந்துக் கல்லூரியின் 2019ஆம் கல்வி ஆண்டிற்கான பரிசில் தினம் 2020ஆம் ஆண்டு நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்ததாயினும் கொரோனோ வைரஸ் தொற்றின் காரணமாக ஏற்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் காரணமாக 2021ஆம் ஆண்டு நான்கு அமர்வுகளாக நடைபெற்றிருந்தமை குறித்த செய்திகள் இவ்விணையம் ஊடாக எடுத்து வரப்பட்டிருந்தன. அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்களினால் தயாரிக்கப்பட்டிருந்த பரிசில் தின அறிக்கையின் அச்சுப் பிரதிகள் சென்ற வாரம் நடைபெற்றிருந்த இறுதி அமர்வின்போது விநியோகிகக்கப்பட்டிருந்தன. கல்விசார் செயற்பாடுகள், இணைப்பாடவிதானச் செயற்பாடுகள் ஆகியவற்றில் வெற்றிபெற்று பரிசில்கள் பெறும் மாணவர்களின் விபரம், மற்றும் பாடசாலை சார்ந்த முக்கியமான தகவல்கள் என்பனவற்றை உள்ளடக்கியதாக இவ் அறிக்கை அமைந்துள்ளது. பரிசில் தினத்திற்கு அனுசரணை வழங்குவதற்கு உருவாக்கப்பட்டதும், பாடசாலையின் வரலாற்றில் ஓர் மைல் கல்லாக அமைந்துவிட்டதுமான ‘மருத்துவகலாநிதி வி.விஜயரத்தினம் நம்பிக்கை நிதியத்தின்’ நிறுவுனரான குழந்தைகள் மருத்துவநிபுணர் மருத்துவ கலாநிதி வி.விஜயரத்தினம் அவர்களைப் பற்றிய குறிப்புக்கள் இவ் அறிக்கையின் பின் இணைப்பாகவுள்ளதையும் அவதானிக்கலாம்.
முழுமையான பரிசில் தின அறிக்கையினை கீழே உள்ள இணைப்பினை அழுத்திப் பார்வையிடலாம்:
No Responses to “காரைநகர் இந்துக் கல்லூரியின் 2019ஆம் கல்வி ஆண்டிற்கான பரிசில் தின அறிக்கை.”