முதற்கட்டத்தில் நாடு முழுவதிலும்; உள்ள 1000 பாடசாலைகளை தேசியப் பாடசாலைகளாக மாற்றும் திட்டத்தில் காரைநகர் இந்துக் கல்லூரியும் உள்வாங்கப்பட்டிருந்தது. தேசியப் பாடசாலையாக இயங்குவதற்கு தேவையான சில அடிப்படைத் தேவைகளை மேம்படுத்தும் பொருட்டு கல்வி அமைச்சினால் ஒரு மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது. கல்லூரியின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்கள் எடுத்திருந்த துரித நடவடிக்கையினால் குறித்த வேலைகள் அனைத்தும் தற்போது நிறைவு செய்யப்பட்டு தேசியப்பாடசாலையாக அங்குரார்ப்பணம் செய்து வைப்பதற்குத் தயார் நிலையிலுள்ளது.
பாடசாலையின் வடக்கு வளாகத்தின் நுழை வாயிலில் புதிதாக இரும்பிலாலான படலைகள் (Gates) அமைக்கப்பட்டுள்ளதுடன் வெளிப்புற மதிலில் தேசியப் பாடசாலை என பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாதுகாப்பு அலுவலருக்கான (Security Guard) சிறிய அறை ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. உயரமான இடத்தில் குடிநீர்த் தாங்கி அமைக்கப்பட்டுள்ளதுடன் நீர் விநியோகக் குழாய்களும் புதிதாக மாற்றியமைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் மேம்படுத்தப்பட்டுள்ளது. மல-சல கூடங்களின் சேதமுற்ற பகுதிகள் புதிதாக மாற்றீடு செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளன. பாடசாலையின் செயற்பாட்டு அறைக்கு மின்னிணைப்புச் செய்யப்பட்டதுடன் சுவர்கள மற்றும் யன்னல்களிற்கு வர்ணம் பூசப்பட்டு பாடசாலை அழகாகக் காட்சியளிக்கிறது.
வேலைகள் நிறைவுசெய்யப்பட்ட பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
No Responses to “காரை.இந்து தேசியப் பாடசாலையாக இயங்குவதற்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வேலைகள் ஒரு மில்லியன் ரூபா செலவில் நிறைவுசெய்யப்பட்டுள்ளன.”