சிவநெறிச்செல்வர் திரு.தி.விசுவலிங்கம்
தலைவர்
சைவ சித்தாந்த மன்றம் கனடா.
பேரன்புடையீர்!
‘சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம’ நூல் வெளியீட்டு விழா சிறப்புற்று விளங்க பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை வாழ்த்துகின்றது
அந்நிய ஆதிக்கத்தின் பிடியில் சிக்கி சைவ சமயம் வீழ்ச்சியடைந்து வந்த காலகட்டத்தில் அதன் எழுச்சிக்கு வித்திட்டு உழைத்த ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்களின் பணிகளை தொடர்ந்து செயற்படுத்த தனது வாழ்நாளை அர்ப்பணித்திருந்த காரைநகர் தந்த மகான் ஸ்ரீமான் அருணாசல உபாத்தியாயர் அவர்களின் அளப்பரிய சைவப்பணிகளை வெளிப்படுத்துகின்ற ‘சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித ;த திரு.ச.அருணாசலம்’ என்கின்ற அரிய நூலினை தங்களது மன்றம் மறுபிரசுரம் செய்து வெளியிடவிருப்பது அறிந்து எமது சங்கம் மகிழ்ச்சியடைகின்றது.
ஸ்ரீமான் அருணாசல உபாத்தியாயர் அவர்கள் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் சைவ பாடசாலைகளையும் சைவ ஆசிரிய கலாசாலைகளையும் தோற்றுவிக்க முன்னின்று உழைத்த பெருமகனாவார். இன்று கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம் என அழைக்கப்பட்டு வருகின்ற காரைநகரின் முதன்மைப் ;பாடசாலையினை காரைநகர் இந்து ஆங்கில வித்தியாசாலை என்ற பெயரில் ஸ்ரீமான் முத்து சயம்பு அவர்களால் நிறுவப்படுவதற்கும் வியாவில் சைவ வித்தியாலயம், சுப்பிரமணிய வித்தியாசாலை ஆகிய கல்வி நிறுவனங்கள் தோற்றம் பெறுவதற்கும் அருணாசல உபாத்தியாயர் அவர்களே மூல காரணமாக அமைந்து விளங்கினார் என்பது வரலாறாகும்.
அனைவராலும் விதந்து போற்றப்படுகின்ற காரை மக்களின் சைவப் பாரம்பரியம் மேம்பட்டு விளங்கவும் நீடித்து நிலைபெறவும் காரணமாக விளங்கிய அருணாசல உபாத்தியாயர் காரை மக்களால் மட்டுமன்றி சைவத்தமிழ் மக்கள் அனைவராலும் என்றென்றும் நினைவு கூரப்படவேண்டியவராவார்.
சைவசமயம் சார்ந்த அரிய பல நூல்களை தேர்ந்தெடுத்து அவை சைவ மக்களை சென்றடைந்து பயனடையும்வண்ணம் மறு பிரசுரம்செய்து வெளியிட்டு வருகின்ற தங்களது பணி பாராட்டுக்குரியதாகும். அந்த வரிசையில் சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம் என்ற நூலின் வெளியீடு வரலாற்றில் பதிவுசெய்யப்டவேண்டியதொன்றாகும். எதிர்வரும் யூலை25ஆம் திகதி Scarborough Civic Centre மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்நூலின் வெளியீட்டு விழா சிறப்புற்று விளங்க பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை வாழ்த்துகின்றது.
மு.வேலாயுதபிள்ளை கனக சிவகுமாரன் மா.கனகசபாபதி
தலைவர் செயலாளர் பொருளாளர்
முழுமையான வாழ்த்துச் செய்தியைக் கீழே காணலாம்.
No Responses to “‘சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம’ நூல் வெளியீட்டு விழா சிறப்புற்று விளங்க பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை வாழ்த்துகின்றது”