சமூக அக்கறைகொண்டு பல்வேறு சமூக உதவித் திட்டங்களையும் மாணவர்களின் கல்வி ஊக்குவிப்புத் திட்டங்களையும் முன்னெடுத்து மக்களின் பாராட்டினைப் பெற்ற சிறந்த சமூகச் செயற்பாட்டாளராக விளங்கியவர் அமரர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி அவர்கள். இவர் விட்டுச் சென்ற நற்பணிகளை தொடர்ந்து முன்னெடுக்கவும் அவரது விருப்பத்தினை நிறைவேற்றி வைக்கவும் நோக்காகக்கொண்டு 2020ஆம் ஆண்டு சமூக சிந்தனை கொண்டு செயலாற்றி வருகின்ற அன்னாரது குடும்பத்தினால் நிறுவப்பட்டதே ‘அமரர் கலாநிதி விஜயரத்தினம் ஜோன் மனோகரன் கென்னடி அறக்கட்டளை’ ஆகும்.
அமரர் கலாநிதி விஜயரத்தினம் ஜோன் மனோகரன் கென்னடி அறக்கட்டளையும், நாடகக் கலையினை மேம்படுத்தும் நோக்குடன் செயலாற்றி வருகின்ற செயற்திறன் அரங்க இயக்கமும் இணைந்து வடமாகாணக் கல்வி அமைச்சின் ஆதரவுடன் வடமாகணப் பாடசாலை மாணவர்களிடையே தனி நடிப்புப் போட்டியினை நடாத்தியிருந்தது. அமரர் கலாநிதி கென்னடி அவர்களின் 4வது ஆண்டு நினைவினை முன்னிட்டு நடாத்தப்பட்டிருந்த இப்போட்டியில் வடமாகாணப் பாடசாலைகளைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர். இறுதிப்போட்டிக்கு ஐந்து மாணவர்களின் தனி நடிப்பு தெரிவுசெய்யப்பட்டு காரை.இந்து நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் 10-01-2021 அன்று நடைபெற்ற கென்னடி நினைவு தின விழாவிலும் பரிசளிப்பு விழாவிலும் மேடையேற்றம் செய்யப்பட்டபோது முதல் மூன்று மாணவர்களும் தெரிவுக் குழுவினால் தெரிவு செய்யப்பட்டு ரொக்கப் பரிசில்கள் வழங்கப்பட்டிருந்தன.
பாடசாலைகளின் ஆசிரியர்கள், மாணவர்கள், பொது மக்கள் என மண்டபம் நிறைந்த கூட்டத்துடன் செயல்திறன் அரங்க இயக்கத்தின் பணிப்பாளர் திரு.தேவநாயகம் தேவானந்த் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவின் பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் கலந்துகொள்வதாக இருந்தபோதிலும் தவிர்க்கமுடியாத காரணத்தினால் அவரால் சமூகமளிக்கமுடியவில்லை. சிறப்பு விருந்தினர்களாக வலிகாமம் கல்விப் பணிப்பாளர் திரு. பொ.ரவிச்சந்திரன், அழகியல் கற்கைகள் நெறிக்கான வடமாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.சிவபாதரத்தினம் சிவசிவா, கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி, யாழ்.உயர் தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றின் ஆங்கில மொழிக்கான வருகைநிலை விரிவுரையாளர் திரு.விஜயரத்தினம் பிறேமதாஸ்குமாரசிறி, காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.ம.மகேந்திரன், காரை.இந்துக் கல்லூரியின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன், யாழ்.பல்கலைக்கழக ஆங்கில இலக்கியத்திற்கான முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி திருமதி வீரமங்கை ஸ்ராலினா யோகரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கில மொழியில் சித்தியடைந்த மாணவர்கள் அமரர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி ஞாபகார்த்த ஊக்குவிப்புப் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
காரைநகர் இந்துக் கல்லூரி, யாழ்ற்ரன் கல்லூரி, சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளிலிருந்து க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றி ஆங்கில பாடத்தில் சாதரண சித்தி, திறமைச் சித்தி ஆகியவற்றைப் பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கலாநிதி அமரர் கென்னடி ஞாபகார்த்தமாக ரொக்கப் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தனர். அமரர் கலாநிதி விஜயரத்தினம் ஜோன் மனோகரன் கென்னடி நம்பிக்கை நிதியத்தினால் உதவப்பட்டிருந்த இப்பரிசில்களை .காரைநகர் பிரதேச சபைத் தலைவர் திரு.திரு.மயிலன் அப்புத்துரை, பிரதேச சபை உறுப்பினர் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களும் வழங்கி கௌரவித்தனர்
நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்பட்ட நிகழ்வின் காணொளிப் பதிவினை கீழே பார்வையிடுவதுடன் இணைக்கப்பட்டுள்ள சில புகைப் படங்களையும் பார்வையிடலாம்:
புகைப்பட உதவி: சிந்துஜா போட்டோ.
No Responses to “அமரர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி அவர்களின் 4வது ஆண்டு நினைவினை முன்னிட்டு தனிநடிப்புப் போட்டியும் பரிசளிப்பு விழாவும் காரை.இந்துவில் வெகு சிறப்பாக நடைபெற்றன.”