எமது சங்கத்தின் முன்னாள் நிர்வாக சபை உறுப்பினர் திரு. நாகராஜா பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பத்தாயார் திருமதி.கமலாவதி நாகராஜா அவர்கள் கொழும்பில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி.கமலாவதி நாகராஜா
மாப்பாணவூரி, காரைநகர், கொழும்பு
அன்னை மடியில்: 14.12.1931 ஆண்டவன் அடியில: 19.07.2015
மலேசியாவை பிறப்பிடமாகவும், மாப்பாணவூரி காரைநகரை வதிவிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.கமலாவதி நாகராஜா அவர்கள் 19.07.2015 ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நல்லதம்பி, பார்வதிப்பிள்ளை தம்பதியின் மகளும், காலஞ்சென்ற நாகராஜா அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், முத்துப்பிள்ளை தம்பதியின் மருமகளும், காலஞ்சென்ற நேசம்மா, லீலாவதி, Dr. குணரட்ணம், சிவபாக்கியம்,சிவராணி ஆகியோரின் சகோதரியும், பாலசுப்பிரமணியம், பாலகிருஷ்ணன், நாகேஸ்வரி ஆகியோரின் அன்புத்தாயாரும், மனோஹரி, சாந்தினி, காலஞ்சென்ற சிவபாலன் ஆகியோரின் மாமியாரும், கபிலன், கஜனன், அகிலா, சரவணன், காலஞ்சென்ற சுமந்திரன், துவாரகா, ஜனகா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியுமாவார்.
அன்னாரின் பூதவுடல் 22.07.2015 மற்றும் 23.07.2015 ஆகிய தினங்களில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்படும். 23.07.2015 வியாழக்கிழமையன்று 11.30 மணியிலிருந்து இறுதிக்கிரியைகள் இடம்பெற்று 1.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்திற்கு தகனத்திற்காக எடுத்துச்செல்லப்படும்.
இத்தகவலை உற்றார் , உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
சறோ சிவபாலன் (மகள், இலங்கை) 01194-112-731206
பாலசுப்பிரமணியம்(மகன், கனடா) 905-479-9852 416-509-8538
பாலகிருஷ்ணன் (மகன், ஜேர்மனி) 01149-911-464278
No Responses to “மரண அறிவித்தல் திருமதி.கமலாவதி நாகராஜா மாப்பாணவூரி, காரைநகர், கொழும்பு”