திரு.ச.அருணாசலம் அவர்கள் குமிழங்குளி காரைநகரைப் பிறப்பிடமாகவும் தங்கோடை காரைநகரை வசிப்பிடமாகவும் கொண்டவர். இவர் ஒரு கல்விச் சேவையாளர் மட்டுமன்றி சமூகச் செயற்பாடுகளுக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்த முதன்மையானவர். “மக்களோடு மக்களாக மக்களுக்கு மகத்தான பணியாற்றியமையினால்” மக்களின் சொத்தாகப் போற்றப்படுகின்றார்.
யா-வியாவில் சைவ வித்தியாலயமே காரைநகரில் முதலாவதாக ஆரம்பிக்கப்பட்ட சைவ பாடசாலையாகும். அதுமட்டுமன்றி சைவ சமயத்ததை வளர்க்கும் நிறுவனமாகவும் இப்பாடசாலை விளங்குகின்றது. திரு.ச.அருணாசலம் அவர்கள் ஆசிரியர்களது வாண்மை விருத்திக்கும் வித்திட்டவராகத் திகழ்ந்தது மட்டுமன்றி இவரது செயற்பாட்டினைத் தொடர்ந்தே ஆசிரியர் பயிற்சிக கலாசாலையும் ஆரம்பிக்கப்பட்டது. இவரது மகத்தான பணி என்றென்றும் போற்றப்பட வேண்டி ஒன்றாகும்.
கல்வியைப் புகட்டுவதில் முனைப்பாகத் திகழ்ந்து சிறந்த கல்விமான்களை இக்கிராமத்தில் உருவாக்கிய பெருமைக்குரியவராவார். இவ்வாறான இவரது பணி என்றென்றும் போற்றப்பட வேண்டிய ஒன்றாகும். மாணவர்களில் ஆரம்பித்து கிராமம், சமூகம், நகரம், நாடு என்ற அளவிற்கு இவரது பணியும் சேவையும் வளர்ச்சியடைந்தமையை முன்னிட்டு எமது பாடசாலை சமூகம் பெருமையடைவதுடன் நூல் வெளியீட்டு விழா சிறப்புற வாழ்த்துகின்றோம்.
திரு.க.சுந்தரலிங்கம்
அதிபர்
யா-வியாவில் சைவ வித்தியாலயம்
காரைநகர்
No Responses to “நூல் வெளியீட்டு விழா சிறப்புற வியாவில் சைவ வித்தியாலய அதிபர் திரு.க.சுந்தரலிங்கம் அவர்களின் வாழ்த்துச் செய்தி”