வாழ்த்துச் செய்தி
நாவலர் வழியில் மகான் அருணாசல உபாத்தியாயர்.
(கி. பி 1864 – 1920)
“நாவலருக்கு பின் அருணாசலம் தான் இந்நாட்டில் ஒரே ஒரு மனிதர்” என்று குறிப்பிட்டுள்ளார்இ தம்பு கைலாய பிள்ளை அவர்கள். (தம்புகைபிலாய பிள்ளை ஆறுமுக நாவலாரின் தமையனார் மகன்)
நாவலருக்கு பின் இலட்சிய வேட்கையுடன் வாழ்ந்தவர் அருணாசல உபாத்தியாயர். காரைநகரில் மட்டுமல்ல யாழ்குடாநாடு முழுவதும் கல்வி வளர்ச்சி பணியை மேற்கொண்டு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர். இவர் வாழந்த காலம் இலங்கையின் சமய மறுமலர்ச்சி காலம் என்பது ஈண்டு குறுப்பிடத்தக்கது. சமய மறுமலர்ச்சியில் காரைநகர் தம்பங்கையாற்ற முன்னெடுத்து சென்றவர் ஆவார்.
அருணாசல உபாத்தியாயர் ஒரு பொது நலவாதி ஆவார். தம் சொத்துக்களை விற்று கல்விப் பணியாற்றியதுடன் மாணவர்களுக்கு உண்டிஇ உறையுள் கொடுத்து தமிழ் மொழிப்பற்றும் சைவப்பற்றும் உடைய சமூகம் ஒன்றை கட்டிஎழுப்பினார். இவர் பற்றி தம்புகையிலாய பிள்ளை 1936 பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
“பரோபகாரிகள் என்று யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்களுள் இரண்டாவதாக நான் மதித்து இருப்பது அருணாசல வாத்தியாரையே” என்று உயர்வாக குறிப்பிட்டிருப்பது மனங்கொள்ளத்தக்கது.
அருணாசல உபாத்தியாயர் தரும சிந்தனையாளன்இ தருமத்தின் வழியில் நம்பணியை மேற்கொண்டு சைவ உலகொன்றை கட்டி காத்த பெருமை அவரையே சாரும்.
இவரின் முயற்சியினால் யாழ்குடாநாடு முழுவதும் பத்திற்கு மேற்பட்ட பாடசாலைகள் பரவலாக ஆரம்பிக்கப்பட்டதுடன் சைவ ஆசிரிய கலாசாலை ஒன்றையும் நிறுவி சைவ ஆசிரியர்களை தோற்றுவிக்கும் பணிக்கு முன்னோடியாக திகழ்ந்தார். சைவ பாடசாலையை நிர்வகிப்பதற்கு இந்து வித்தியா சங்கம் ஒன்றை ஆரம்பித்தார். இதுவே பின்னர் யாழ்ப்பாணம் இந்துசபை என அழைக்கப்படலாயிற்று. ஆன்ம சக்தியுடன் சைவசமய பணியை முன்னெடுத்துச் சென்ற மகான்.
இவ்வாறான பொது நலவாதிகளை இன்று நம்மிடையே காண்பது அரிதினும் அரிதுஇ காலம் கடந்தேனும் அவரை நினைவு கூர்ந்து நூல்வெளியிடும் கனடா சைவசித்தாந்த சபையின் பணி என்றும் போற்றத்தக்கதாகும். இவர்கள் பணி சிறக்க மனமார்ந்த நன்றிகளுடன் வாழ்த்துக்களும் உரித்தாகும்.
வணக்கம்
திரு. ந. பரமசிவம் B. A, PGDE, S.L.E.A.S
ஓய்வு நிலை அதிபர்.
No Responses to “நாவலர் வழியில் மகான் அருணாசல உபாத்தியாயர் -ஒய்வுநிலை அதிபர் திரு.ந.பரமசிவம்-”