உ
சிவமயம்
“தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி”
சைவசித்தாந்த மன்றம் கனடா
தலைவர்: சிவநெறிச் செல்வர் திரு.தி. விசுவலிங்கம்
அன்புடையீர் வணக்கம்
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி தமிழ்க் குடியாகும். அப் பெருங்குடியினர் பண்பாட்டுடன் சமயச் செந் நெறியிலும் சிறந்து விளங்கினர். இவர்கள் மேற்கொண்ட சமயநெறி சைவநெறியாகும்.
ஈழ மணித்திருநாட்டின் யாழ்ப்பாணத்தில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாலவர் பின்பற்றிய வழியில் கிராமங்கள் தோறும் கால்நடையாக சென்றும், அரிக்கன் லாம்புடன் மாட்டுவணடியிலும் சென்று அர்ததமுள்ள வைசவசித்தாந்த கருத்துக்களையும், சமயச் சொற்பொழிவுகளையும் பரப்புரை செய்து அதில் வெற்றியும் கண்டவர் காரைநகரைச் சேர்ந்த அருணாசல உபாத்தியார் என்ற மகான் என்பதில் பெருமிதம் கொள்கின்றோம்.
வைசமும் தமிழும் கண்ணெனக் கொண்டு அருளியல், வாழ்வியல் வழிபாடுகள் சிறக்கவும், எமது கிராமத்திலும், யாழ்ப்பாணத்திலும் பல பாடசாலைகள் உருவாகுவதற்கும் தனது செல்வங்கள் அனைத்தையும் பயன்படுத்தி அயராது தொண்டாற்றிய பெரிய மகான் என்பதில் பூரிப்படைகின்றோம்.
“அவன் அவள் அதுவெனும் அவைமூ வினைமையின்
தோற்றிய திதியே ஓடுங்கி மலத்தளதாம்
அந்தமாதி என்மனார் புலவர்”
சைவப் பாடசாலைகளைகளை நிறுவவும், சைவ ஆசிரிய கலாசாலையை உருவாக்கவும், சைவ ஆசிரியர்களைத் தோற்றிவிக்கவும் அயாரது தொண்டாற்றிய பெரிய மகான் திரு.ச. அருணாசலம் உபாத்தியார் அவர்களின் வரலாற்று நூல் மீளவும் வெளிவருவதையிட்டு பெருமகிழ்ச்சயடைகின்றோம்.
கனடா சைவசித்தாந்த மன்றம் எடுத்த இம்முயற்சி பாராட்டுதலுக்குரியதாகும். இவர்கள் இதனோடு நின்றுவிடாது புலம்பெயர் தேசத்து இளம் சமூதாயத்திற்கு தேவையான பண்பாடு, வரலாறு, சித்த மருத்துவம், மொழி;, சமயஅறிவு போன்ற துறைகளில் நூல்கள் பலவற்றை தொடர்ந்து வெளியிட முன்வருதல் வேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். திரு.ச. அருணாசலம் உபாத்தியார் அவர்களின் வரலாற்று நூல் வெளியீட்டு விழா சிறப்புற அமைய ஈழத்துச் சிதம்பர ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ ஆனந்த தாண்டவ நடராஜன் அருள் பாலிக்க வாழ்த்தி வணங்குகின்றோம்.
“மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்||
நன்றி
இங்ஙனம்.
சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
செயற்குழு உறுப்பினர்கள்
சுவிஸ் வாழ் காரை மக்கள்
24.07.2015
No Responses to “திரு.ச. அருணாசலம் அவர்களின் வரலாற்று நூல் வெளியீட்டு விழா சிறப்புற சுவிஸ் காரை அபிவிருத்தி சபையின் வாழ்த்துரை”