சைவ சித்தாந்த மன்றம்,
கனடா.
கனடா.
நூல் வெளியீடு – மீழ் பதிப்பு
25/07/2015
25/07/2015
யாழ்பாணத்தின் மூன்று தமிழ் சார்ந்த சமயக் கண்ணகள் அதில் ஒன்று எம் அருமை அருணாசல உபாத்தியாயர்.(மற்றிருவர் ஆறுமுக நாவலர் , இராசரத்தினம்)
சரித்திர நாயகர்களின் சொத்துக்களை மீழசைவு செய்வதென்பது விலை மதிப்பற்ற ஒன்று .
காரைநகர் குட்டிப்புலத்தில் தோன்றி, தன் கோட்டையாக தங்கோடையில் வாழ்ந்தவர் ஐயா அருணாசலம்.
எமது அல்லின் ஏபிரகாம் காலத்தில் வாழ்ந்த சமகால சரித்திர நாயகன் இவர். அல்லின் ஏபிரகாம் அவர்கள் எமது மண்ணின் கற்பகதருவினூடே வால்வெள்ளியை வயப்படுத்தினார் , ஆனால் ஐயா அருணாசலம் அவர்கள் எமது ஊரின் கல்வியின் கண்களா உண்மையான விடிவெள்ளியாய் நின்று வீறு நடை போட்டவர்.
எமது அல்லின் ஏபிரகாம் காலத்தில் வாழ்ந்த சமகால சரித்திர நாயகன் இவர். அல்லின் ஏபிரகாம் அவர்கள் எமது மண்ணின் கற்பகதருவினூடே வால்வெள்ளியை வயப்படுத்தினார் , ஆனால் ஐயா அருணாசலம் அவர்கள் எமது ஊரின் கல்வியின் கண்களா உண்மையான விடிவெள்ளியாய் நின்று வீறு நடை போட்டவர்.
உண்மையில் இதைத்தான் ஐய்யன் வள்ளுவன் தனது முதற் குறளில்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
பகவன் முதற்றே உலகு
என்று கூறியுள்ளானோ என்று எண்ணவைக்கின்றது……. காரணம்
அல்லின் – அருணா , உண்மையில் ஆழமாக நோக்குங்கள் ……………..
அல்லின் விண்ணை நோக்கினார் , ஐயா அருணா மண்ணை நோக்கினர் ……
இரண்டுமே இந்த பிரபஞ்சத்தின் சொத்துத்தான், இருந்தும் இது எம் மண்ணின் முதுசம் எனும் பொழுது எம்மையெல்லாம் முழிக்க வைக்கின்றது.
இரண்டுமே இந்த பிரபஞ்சத்தின் சொத்துத்தான், இருந்தும் இது எம் மண்ணின் முதுசம் எனும் பொழுது எம்மையெல்லாம் முழிக்க வைக்கின்றது.
ஆங்கிலேயர் ஆட்சியில் அருணாசலம் ஓர் காந்திய ஆயுதம் என்றால் மிகையாகாது. அடிமைக்காலத்தில் அவர்களை எதிர்த்து சைவைத்தையும் தமிழையும் தனித்துவமாய் தக்கவைப்பது என்பது தன்னிகரற்ற செயல்.
நாவலர் வழி நின்று திண்ணைப் பாடசாகளை துணிவுடன் அன்று அருணாசலம் ஐயா இட்ட வித்துத்தான் இன்று நம் வித்தியாலயங்களாக வியாபித்து விருட்சமாக வேரூன்றியுள்ளன.
2011ம் ஆண்டு பிருத்தானியா காரை நலன் புரிச் சங்க நிர்வாகத்தின் தொலைநோக்கு கண்களின் பட்டு, அதில் பரிணமித்ததுதான் ” முதுசங்களைத் தேடி ”. இதன் நோக்கமே எமது மண் சார் முதாதையரின் முக்கியமான நூல்களை மூழ்க விடாது மீழ் கொண்டு வருவதென்பது. இதன் முதற் குழந்தை FXC அவர்களின் ”காரை மான்மியம்”, இரண்டாவது செல்வம் மூன்று ஆண்டு தாண்டியும், முக்கியம் பெற முடியவில்லை அது ” சைவமகாசபை பொன்விழா மலர் ” (இன்னமும் பதிப்பில் உள்ளது ), ஆனால் இன்று கனடா சைவ சித்தாந்த மன்றம் இந்த எமது சைவமாக சபையால் 29/09/1971 அன்று விளியிடப்பட்ட ” சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த ஐயா அருணாசலம்” அவர்களின் நூலை மீழ்பதிப்பு செய்வது என்பது எமக்கு பெரு மகிழ்ச்சியை தருவதுடன், எமது மண்ணுக்கு விலைமதிப்பற்ற மதிப்பையும் கொடுக்கின்றது. சைவ சித்தாந்த மன்றத்துடன் எமது கனடா காரை இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கமும் கைகோத்துள்ளமையும் எமக்கு களிப்புத்தான்.
தங்கள் இந்த நூல் மீழ் பதிப்பு கனடாவில் மட்டுமல்ல காரை மக்கள் வாழ் அனைத்து நாடுகளிலும் வெளியிடப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்வதுடன், இதற்கான அனைத்து உதவிகளையும் எமது பிருத்தானியா காரை நலன் புரிச்சங்க ” முதுசங்களைத் தேடி ” நிர்வாக இணைப்பாளர்கள் இணைந்து செயற்பட காத்திருக்கின்றாகள் என்று கூறி, மேலும் தங்கள் நிகழ்வும் இனிதாய் நிறைவுற இறைவனை வேண்டுகின்றோம்.
யாதானும் நாடாமால், ஊர்ஆமால், என்ஒருவன்
சாந்துணையும் கல்லாத வாறு. – குறள் 397
நன்றி.
வணக்கம்.
நிர்வாகம்,
பிருத்தானியா காரை நலன் புரிச்சங்கம்.
No Responses to ““உண்மையான விடிவெள்ளியாய் வீறுநடை போட்டவர் அருணசலம்” பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கம்”