ஈழத்துச் சிதம்பரம் எனப் போற்றப்படும் காரைநகர் சிவன் கோயிலின் ஆதீனகர்த்தாவாகிய முருகேசு சுந்தரலிங்கம் அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை அதிர்ச்சியும் ஆழ்ந்த துயரும் அடைந்துள்ளது. அமரர் சுந்தரலிங்கம் அவர்கள் அமைதி, அடக்கம், அன்பான அரவணைப்பு, தயவான பேச்சு ஆகிய நற்குணங்களைக் கொண்ட உயரிய பண்பாளனாக மக்களின் அன்பையும் நன் மதிப்பினையும் பெற்று விளங்கியவர். சிவன் திருத்தலத்தினை சிறந்த முறையில் பரிபாலனம் செய்து நித்திய, நைமித்திய கருமங்கள் செவ்வனே நடைபெற உழைத்தவர். ஆலயத்தின் ஓதுவாராகவும் பணியாற்றி திருமுறைகளை முறை தவறாது பக்தி ததும்ப ஓதி வந்ததன் மூலம் பக்தி உணர்வினை வளர்த்தவர்.
கல்வியுடன் மட்டுமல்லாது சைவப் பண்பாட்டு ஒழுக்க விழுமியங்களை மாணவர்கள் ஒழுக வழிகாட்டி வருகின்ற காரை.இந்துவின் மகிமை மிக்க பழைய மாணவனாகிய சுந்தரலிங்கம் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்ற பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை அன்னாரது இழப்பினால் ஆறாத் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கு ஆறுதலைத் தெரிவிப்பதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய ஈழத்துச் சிதம்பரத்தில் உறையும் சௌந்தராம்பிகை சமேத சுந்தரேசப் பெருமானை இறைஞ்சுகின்றது.
No Responses to “காரை.இந்து அன்னையின் புதல்வனும் ஈழத்துச் சிதம்பர ஆதீனகர்த்தாவுமாகிய முருகேசு சுந்தரலிங்கம் அவர்களின் மறைவு குறித்து பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தி.”