நாவலருக்கு அடுத்து வைத்துப் போற்றப்படும் காரைநகர் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்கள் பற்றிய “சைவாசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம் அவர்கள்” என்ற நூல் வெளியீட்டு நிகழ்வு அண்மையில் கனடாவில் நடைபெற்றிருந்த நிலையில் எமது கல்லூரியின் பழைய மாணவரும் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாசாலை பழைய மாணவர் சங்க பிருத்தானியாக் கிளையின் போசகரும் நீண்ட நெடுநாள் சமூகத் தொண்டரும், ஆறுமுகநாவலர் சபைத் துணைத் தலைவருமாகிய திரு.ஐ.தி.சம்பந்தன் அவர்களின் வாழ்த்துச் செய்தி தவிர்க்க முடியாத காரணத்தால் தாமதமாகக் கிடைக்கப் பெற்ற போதிலும் நாவலர் சபையின் சார்பில் வழங்கப்பட்ட செய்தி என்பதனால் அதன் முக்கியத்துவம் கருதி இங்கே எடுத்துவரப்படுகின்றது.
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை வாழ்த்துச் செய்தி
நாவலர் வழிவந்த மகான் அருணாசலம் உபாத்தியார் காரைநகருக்குப் பெருமை தேடியவர்
இருள் சூழ்ந்த காலத்தில் சைவத்தையும் தமிழையும் தழைத்தோங்கத் தமது வாழ்க்கையை முழுமையாகத் தியாகம் செய்தவர் நாவலர் பெருமான் அவர்கள். அவர் காலத்தில பல சீடர்களும், கல்விமான்களும் அறிஞர்களும் உருவாகினா.; அவரது கொள்கையினாலும் கல்விப்பணியினாலும்; பலர் ஈர்க்கப்பட்டனர். அவ்வழிவந்தவரே மகான் அருணாசலம் உபாத்தியார் அவர்கள். நாவலர் அருணாசலம் என்று அறிஞர் உலகினால் அழைக்கப்பட்டு வந்தவர். இவர் நாவலர் பெருமானின் சைவத் தமிழை வளர்ப்பதில் தம்மை முழுமையாக அர்பணித்து செயலாற்றி வந்தவர் தமது சொத்துக்களையும் முதலீடு செய்தவர். பிறமதத்தவர்களின் ஆக்கிரமிப்பை தடுப்பதற்கு சைவத் தமிழ்க் கல்வியை மக்களிடையே பரப்புவதற்கும் மேற்கொண்ட முயற்சியே சைவப் பாடசாலைகளின் தோற்றமாகும்.
வண்ணார் பண்ணையில் ஆரம்பித்த சைவப் பிரகாச வித்தியாசாலை போன்று ஊர்தோறும் அமைக்கப்படவேண்டும் என்பதே நாவலர் பெருமானின் நோக்கமாகும். அவருடைய நோக்கத்தின் அடிப்படைலேயே மகான் அருணாசலம் உபாத்தியாரும் அதன்பின்பு இந்துபோட் இராசரத்தினம் அவர்களும் செயற்பட்டு வந்தனர்.
காரைநகரில் மூன்று தமிழ்ப் பாடசாலைகளை உருவாக்கிய பெருமைக்குரியவர் மகான் அருனாசலம் உபாத்தியாயர். பிறந்த மண்ணிற்கு செய்த பெரும் கல்விப் பணியாகும். நூறு ஆண்டுகள் சென்றாலும் அவரை நினைவுகூர வைப்பது அப்பாடசாலைகளே. அயல் கிராமங்;களிலும் சைவப்பாடசாலைகளை உருவாக்கி சகலமக்களினதும் மதிப்புக்குரியவரானார். காரைநகரில் பிறந்தவரானாலும் வண்ணர்பண்ணையில் வாழ்ந்து கொண்டே சைவத் தமிழ்ப் பணியை மேற்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. பரந்த உள்ளம் கொண்டவர்களின் பணி அவ்வாறே அமையும். அதுவும் காரைநகருக்கே பெருமை.
1969ல் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சபையை உருவாக்கவும் நாவலருக்கு பெருவிழா. சிலைநாட்டுவிழா. தேசபவனியோடு மகாநாட்டு மலர் ஒன்று வெளியிடப்பட்டது அதிலும்; நான் முக்கிபங்கு வகுக்கும் வாய்புக்கிடைத்தது. மலர்க் குழு அசிரியர் மதிப்புக்குரிய இலட்சுமண ஐயா காரைநகர் நாவலர் அருணாசல உபாத்தியாயர் பற்றி ஒரு கட்டுரை எழுதும்படி என்னைக் கேட்டார். பலரிடம் தொடர்பு கொண்டேன் போதிய தகவல் கிடைக்கவில்லை. அந்த வரலாற்று மலரில் இத்கைய பெருமைக்குரிய மகான் அருணாசலம் உபாத்தியாரின் வரலாறு இடம்பெறவில்லையென்று கவலையடைகின்றேன்.
நாவலர் வழிநின்று சைவத்தையும் தமிழையும் வளர்த்த மகான் அருணாசலம் உபாத்தியாயர் அவர்கள் பற்றி திரு.சி கணபதிப்பிள்ளை ஐயர் அவர்கள் இந்நூலை எழுதியதற்கும் அந்நூலை சிறந்த முறையில் வெளியிட முன்வந்த கனடா சைவசித்தாந்த மன்ற தலைவர் சிவநெறிச் செல்வர் திரு.தி.விசுவலிங்கம்; அவர்களுக்கும் இதயம் நிறைந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவிக்கின்றோம்
இரண்டாம் பதிப்பு நூல்வெளியீடு காரைநகரில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல பாடசாலைகளிலும் அறிஞர்களிடமும் இருந்து குவியும் வாழ்த்துச் செய்திகளிலிருந்து அறியக்கூடியதாகவிருக்கின்றது. இச்செய்திகளை கனடா காரை இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் அதன் இணையத்தளத்தில் சிறப்பாக வெளியிட்டு சிறந்த பரப்புரை செய்து வருகின்றனர்
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சபையின் சார்பில் நாவலர் வழிவந்த மகான் அருணாசலம்; உபாத்தியார் பற்றிய நூல் வெளியீட்டுவிழா சிறப்பாக நடைபெற வாழ்த்;துக்களையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கின்றோம்
திரு.தி.விசுவலிங்கம் திருமதி வடிவழகாம்பிகை அவர்களும் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து சைவத் தமிழ்ப் பணியாற்ற ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சபையின் சார்பில் வாழ்த்துன்றோம்.
வணக்கம்
ஐ.தி.சம்பந்தன்
துணைத் தலைவர்
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை
22-07-2015
No Responses to “நாவலர் வழிவந்த மகான் அருணாசலம் உபாத்தியார் – ஆறுமுகநாவலர் சபைத் துணைத் தலைவர் வாழ்த்து-”