எமது கல்லூரியில் 20 வருடங்களிற்கு மேலாக நல்லாசிரியையாக, செயற்றிறன்மிக்க நல்லதிபராக கடமையாற்றிய திருமதி தேவநாயகி பாலசிங்கம் அவர்களின் பாசமிகு கணவர் திரு மார்க்கண்டு பாலசிங்கம் அவர்கள் இறைபதம் அடைந்த செய்தி கேட்டு எம்கல்லூரிச் சமூகம் அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.
அமரர் மார்க்கண்டு பாலசிங்கம் அவர்கள் மக்கள் வங்கியின் உதவி முகாமையாளராக கடமையாற்றிய காலத்தில் தனது வேலைப் பழுவின் மத்தியிலும் திருமதி தேவநாயகி பாலசிங்கம் அவர்கள் எமது கல்லூரியை திறம்பட நிர்வகிப்பதில் உறுதுணை புரிந்தவர். திருமதி பாலசிங்கம் அவர்கள் எமது கல்லூரியின் முதலாவது பெண் அதிபர் மாத்திரமன்றி, செயற்றிறன்மிக்க துணிச்சலான அதிபர் என்றே கூறலாம். அனைவருடனும் அன்பாகவும், பண்பாகவும், சரளமாகவும் பேசும் பண்புமிக்கவர். அர்ப்பணிப்புமிக்க சேவையாளர். எமது கல்லூரி இடம்பெயர்ந்திருந்த மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் கல்லூரியை மீளவும் சொந்த இடத்திற்குக் கொண்டுவந்து செயற்படுத்துவதில் அயராது உழைத்து வெற்றி கண்டவர். அவ்வகையில் அவருடைய சேவையை கல்லூரிச் சமூகத்தால் என்றென்றும் மறக்க முடியாது. பிற்காலத்தில் அவரது செயற்றிறமையால் பதவி உயர்வு பெற்று உதவிக் கல்விப் பணிப்பாளராக பரீட்சைத் திணைக்களத்தில் கடமையாற்றினார். ஓய்வின் பின்னரும் இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தின் கல்வியியற் துறையில் நிபுணத்துவ ஆலோசகராக பணியாற்றுவது எமது கல்லூரிக்கு பெருமை சேர்க்கின்றது. இத்தகைய பெருமைமிகு எமது கல்லூரியின் முன்னாள் அதிபர் தனது அன்புக் கணவரை இழந்து துன்புற்றிருப்பது கண்டு நாமும் துயரடைகின்றோம்.
அமரர் மார்க்கண்டு பாலசிங்கம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு கல்லூரி சமூகம் சார்பாக கண்ணீர்ப் பூக்களைக் காணிக்கையாக்குவதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
திருமதி வாசுகி தவபாலன்
அதிபர்
(கல்லூரிச் சமூகம் சார்பாக)
முழுமையான கண்ணீர் அஞ்சலியைக் கீழே காணலாம்.
No Responses to “அமரர். மார்க்கண்டு பாலசிங்கம் அவர்களின் மறைவு குறித்து கல்லூரி சமூகத்தின் கண்ணீர் அஞ்சலி”