சுவிஸ் வாழ் காரை குடும்ப அங்கத்தவர்களின் உன்னதமான பேராதரவுடன் எதிர்வரும் 13.09.2015இல் பிற்பகல் 13.00 அளவில் நடைபெற இருக்கின்ற காரைத்தென்றல்- 2015 நிகழ்வில் தவில் நாதஸ்வரக் கலைஞர்கள் கௌரவிக்கப்பட இருக்கின்றார்கள்.
சுவிற்சர்லாந்துக்கு வருகைதந்துள்ள காரையம்பதி மூத்த நாதஸ்வரக்கலைஞர் கைலாயகம்பர் அவர்களின் பேரன் தவில் வித்துவான் “லய ஞான மணி” கோவில்குளம் வீராச்சாமி அரிகரபுத்திரன் (கரன்) அவர்களும், தவில் வித்துவான் “தாள லய இளவரசு” உடுப்பிட்டி பத்மநாதன் செந்தூரன் அவர்களும், நாதஸ்வர வித்துவான் “நாத காண மணி” சுதுமலை நாகராசா மதுசூதனன் அவர்களும், நாதஸ்வர வித்துவான் “மதுர கான ஜோதி” திருமலை முத்துலிங்கம் யோகேஸ்வரன் அவர்களும் சுவிஸ்காரை அபிவிருத்திச் சபையினரால் விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறார்கள். இசைபிரியர்கள் அனைவரும் நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இவ் விழாவின் ஆரம்பத்தில் மேற்குறித்த புகழ்பூத்த குழுவினரின் மங்களவாத்திய கச்சேரி இடம்பெறும் என்பதையும் அறியத்தருகின்றோம்.
கலைஞர்களின் நிழற்படங்களை கிழே காணலாம்.
நன்றி
இங்ஙனம்,
சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
செயற்குழு உறுப்பினர்கள்,
சுவிஸ் வாழ் காரை மக்கள்.
02. 09. 2015
வீராச்சாமி அரிகரபுத்திரன் (கரன்)
பத்மநாதன் செந்தூரன்
நாகராசா மதுசூதனன்
முத்துலிங்கம் யோகேஸ்வரன்
No Responses to “காரைத் தென்றல்-2015 இல் தவில் நாதஸ்வரக் கலைஞர்கள் கௌரவிப்பு”